இரண்டாம் திருமணம் 45 வயசு நபரை மணக்கும் திவ்யதர்ஷினி..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

டிவி சேனல் மூலமாகவே பல பிரபலங்கள் திரைத்துறையில் அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றனர். அதில் முக்கியமான டிவி சேனல் என்றால் விஜய் டிவியைதான் கூற வேண்டும்.

விஜய் டிவி தொலைக்காட்சியை பொருத்தவரை அதில் இருந்து பல நபர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்து அங்கு பெரிய இடத்தை பெற்று இருக்கின்றனர். மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்பு விஜய் டிவியில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

ஏனெனில் விஜய் டிவியில் வெளியாகும் நிகழ்ச்சிகள் பலவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து வழங்குபவர்களுக்கும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் சிறு வயது முதலே விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி டிடி நீலகண்டன்.

விஜய் டிவியில் பிரபலம்:

பொதுவாக இவர் டிடி என்று அனைவராலும் அழைக்கப்படுவார் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த காலத்தில் இவருக்கு இந்த பட்டத்தை நடிகர் சிம்புதான் வைத்தார். டிடி ஒரு திறமையான தொகுப்பாளினி ஆவார்.

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் கூட தயங்காமல் அவரை பேட்டி எடுக்கக் கூடியவர் டிடி. கிட்டத்தட்ட பல வருடங்கள் தொகுபாளினியாக இவர் இருந்திருக்கிறார். இவரது தனிப்பட்ட திறனை பார்த்த விஜய் டிவி காபி வித் டிடி என்கிற தனி நிகழ்ச்சியையே இவருக்கு ஏற்பாடு செய்தது.

அந்த நிகழ்ச்சியில் பிரபல சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பதுதான் டிடியின் வேலையாக இருந்தது. இயக்குனர் ஷங்கரில் தொடங்கி பெரும் நடிகர்கள் இயக்குனர்கள் என பலரையும் இவர் பேட்டி எடுத்திருக்கிறார். இதனாலேயே திரைத்துறையில் அதிக பிரபலங்களுடன் நட்பில் இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி.

பட வாய்ப்புகள்:

அவ்வப்போது இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நிறைய திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் திரைத்துறையின் மீது பெரிதாக ஈடுபாடு இல்லாத காரணத்தினால் திவ்யதர்ஷினி தொடர்ந்து அதிகமான படங்களில் நடிப்பது கிடையாது.

பவர் பாண்டி, சர்வம் தாளமயம், காபி வித் காதல் மாதிரியான திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் திவ்யதர்ஷினி நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு விபத்து நடந்ததால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.

திருமணத்திற்கு பிறகு டிடி திரை துறையில் கவனம் செலுத்த மாட்டார் தொகுப்பாளினியாகவும் இருக்க மாட்டார் என்று பலரும் நினைத்தனர் ஆனால் அப்பொழுதும் அவர் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார் இந்த நிலையில் சில காலங்களிலேயே அவருடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

அதற்கு பிறகு இன்னமும் மற்றொரு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அடுத்து மறு திருமணம் செய்யப் போகிறார் திவ்யதர்ஷினி என்ற பேச்சுக்கள் இருக்கின்றன. 45 வயதான இந்த நபருக்கும் திவ்யதர்ஷினிக்கும் திருமணம் செய்ய இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தாலும் இது குறித்து இப்பொழுது வரை எந்த அதிகார பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version