இரண்டு திருமணம்.. ஹீரோக்கள் மீது வந்த அந்த ஆசை.. கூச்சமின்றி பச்சையாக கூறிய விஜயின் ரீல் அம்மா ஜெயசுதா..!

தமிழில் எப்படி நடிகை சரண்யா அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிறப்பு நடிகையாக இருந்து வருகிறாரோ அதே போல தெலுங்கு சினிமாவில் அம்மா கதாபாத்திரத்திற்கு பிரபலமானவர்தான் நடிகை ஜெயசுதா.

1972 ஆம் ஆண்டு முதலே இவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 1970 காலக்கட்டங்கள் இவருக்கு பொன்னான காலக்கட்டங்கள் என கூறலாம். ஏனெனில் அந்த ஆண்டுகளில் வருடத்திற்கு 5 முதல் 7 படங்கள் வரை வரிசையாக நடித்து வந்தார் ஜெயசுதா.

சினிமா வாழ்க்கை:

தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான அதே காலக்கட்டத்தில் தமிழிலும் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் ஜெயசுதா. அந்த சமயங்களில் குல கௌரவம், பெத்த மனம் பித்து, பாரத விலாஸ் மாதிரியான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஜெயசுதா.

jayasudha

எனவே அப்போது முதலே தமிழ் சினிமாவோடு இவருக்கு தொடர்பு இருந்து வருகிறது. அதிகப்பட்சம் அந்த காலக்கட்டங்களில் சினிமா ரசிகர்களாக இருந்த பலருக்கும் இவரை தெரிந்திருக்கும். வயாதான பிறகு தொடர்ந்து அம்மாவாக நடிக்க துவங்கினார் ஜெயசுதா.

தமிழில் வாய்ப்பு:

தெலுங்கில் ராம்சரண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார் ஜெயசுதா. தமிழிலும் தவசி திரைப்படத்தில் விஜயகாந்திற்கு அம்மாவாக நடித்திருப்பார். போன வருடம் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கும் அம்மாவாக நடித்திருந்தார் ஜெயசுதா.

இதனால் தொடர்ந்து தற்போதைய தலைமுறையினரும் அடையாளம் காணும் ஒரு நடிகையாக ஜெயசுதா இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகியுள்ளது. முதலில் கக்கலபுடி ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்திருந்தார்.

திருமண வாழ்க்கை:

அவருடன் விவாகரத்து ஆன நிலையில் 1985 இல் பாலிவுட் தயாரிப்பாளர் நிதின் கபூரை திருமணம் செய்தார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இந்த நிலையில் நடிகை ஜெயசுதா மூன்றாவதாக திருமணம் செய்ய உள்ளதாக வதந்திகள் வலம் வந்து கொண்டுள்ளன.

Jayasudha

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் யார் மீதாவது காதல் வந்ததா என ஜெயசுதாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயசுதா “ஆரம்பத்தில் எனக்கு தெலுங்கு ஹீரோக்கள் மீது சின்ன ஈர்ப்பு இருந்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீதுதான் க்ரஷ் இருந்தது. அப்போதே அவரை திருமணம் செய்ய நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை.

பிறகு ஒரு பாடகரை காதலித்தேன். ஆனால் பிறகுதான் அவர் தன்பாலின ஈர்ப்பாளர் என தெரிந்தது. அதற்கு பிறகு யாரையும் காதலிக்கவில்லை” என்கிறார் ஜெயசுதா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version