நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா..? 1000 கோடி சொத்துக்கு வாரிசு..!

தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் நெப்போலியன் ஆரம்ப காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களை செய்வதை அடுத்து ஹீரோவாக களம் இறங்கினார்.

கே என் நேருவின் உறவினரான இவர் அரசியலையும் விட்டு வைக்காமல் அதிலும் தனக்கு என்று ஒரு தனி முத்திரையை பதித்த நெப்போலியன் ஒரு மிகச் சிறப்பான தந்தையாக இன்று தன் மகனுக்காக அனைத்தையும் விட்டு விட்டு அமெரிக்காவில் குடியேறி சாதித்திருக்கிறார்.

நடிகர் நெப்போலியன்..

இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூக நீதி அமைச்சராக பொறுப்பு வகித்ததை அடுத்து ஆரம்பத்தில் புது நெல்லு புது நாத்து எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இவர் நடிப்பில் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட படங்கள் வெளி வந்துள்ள நிலையில் தசாவதாரம், விருமாண்டி, சுயம்வரம், தாயகம், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்கள் இவரது நடிப்பை வெகுவாக எடுத்துக் காட்டும் படி அமைந்த திரைப்படங்களாக உள்ளது.

இவர் ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான நிலையில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதை கண்டறிந்து ஆங்கில மருத்துவத்தில் மருத்துவம் பார்த்து குணமாகவில்லை.

இதனை அடுத்து நெல்லையில் இருக்கும் பரம்பரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனுஷ் நோயின் தாக்கத்திலிருந்து சற்று விடுபட்ட நிலையில் மகனின் விருப்பத்திற்கு ஏற்ப சினிமாவிற்கும் அரசியலுக்கும் பை,பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தை துவங்கி செட்டிலானார்.

இதனை அடுத்து இந்த நோயின் தாக்கத்தில் இருப்பவர்கள் பத்து வயதுக்கு மேல் நடக்க முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் நீண்ட நாள் வாழ மாட்டார்கள் என்று சொன்னதை அடுத்து தனது மூத்த மகனின் மீது கொண்டிருந்த அன்பால் அவரை 25 வயது வரை பாதுகாத்து இந்த அளவு ஆளாக இருக்கும் இவரை பாராட்டாமல் இருக்க முடியாது.

நெப்போலியன் மருமகள் யார் தெரியுமா?

இந்நிலையில் 25 வயதை கடந்திருக்கும் தனுசுக்கு திருநெல்வேலியில் இருக்கும் ஏழை குடும்பத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஒரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்த நிலையில் இவர்களது திருமணம் ஜப்பானில் நடக்க உள்ளது.

மேலும் விமான பயணங்களை மேற்கொள்வதில் சிக்கல் இருக்கக்கூடிய தனுஷ் தனது சொந்த சொகுசு கப்பலின் மூலம் இந்த திருமண நிகழ்ச்சிக்கு போகலாம் என தெரியவந்துள்ளது.

அடுத்து ஜப்பானில் திருமணத்தை நடத்துவதற்காக விசா பெறக்கூடிய வழிமுறைகளில் நெப்போலியன் படு பிஸியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை இவர் மருமகளாக தேர்ந்தெடுக்கும் போது தனக்கு நிகரான அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண்ணை பார்க்கவில்லை என்ற பேச்சுக்களும் பரவலாக அடிபடுகிறது.

மேலும் ஏழை பெண்ணாக இருந்தாலும் தனது மகன் மீது அக்கறையோடும் அன்போடும் நடக்கக்கூடிய பெண்ணாகத்தான் சொந்தத்திலிருந்து இந்த பெண்ணை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

அத்தோடு ஆயிரம் கோடிக்கு அதிபதியாக கூடிய இந்த பெண்ணின் திருமணமானது 200 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது என்று சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.

1000 கோடி சொத்துக்கு வாரிசு..

தனது மகனை கவனித்துக் கொள்ள வேலைக்காரியை போட்டால் அது சரி வராது என்பதை உணர்ந்து கொண்டு தான் இது போன்ற ஒரு முடிவுக்கு வந்து அதற்கு உரிய செயல்களில் ஈடுபட்டு இருக்கக்கூடிய நெப்போலியன் வருங்காலத்தில் தனது பிசினஸையும் அக்ஷயா பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது கம்பெனி நிர்வாகம் முழுவதுமே தனுஷின் கையில் உள்ளது.அந்த வகையில் மிகவும் அறிவாளியான சாமர்த்தியமான தன்னைக் கொண்டவர்.

என்ன அவரிடம் இருக்கும் இந்த குறையால் எந்த ஒரு பொருள் கீழே விழுந்தாலும் குனிந்து எடுக்க முடியாது என்ற ஒரு குறையை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.

எனவே இந்த திருமண நிகழ்வுக்கு பிறகு இன்னும் நல்ல முறையில் தனுஷுக்கு மெச்சூரிட்டி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அத்தோடு சந்ததிகள் உருவாகும் போது சந்தோஷங்கள் ஏற்படுவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் உள்ளது என்று கூறுகிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam