“குங்கும.. குங்கும.. பூவே..!” – முகம் ஜொலிக்க குங்குமப்பூ ஃபேஸ் பேக்..!

பெண்களுக்கு முகத்தை அழகாக வைத்துக் கொள்வதில் அலாதி இன்பம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் உங்கள் முகம் பார்க்கும் போது பளிச்சென்று கலர்புல்லாக இருக்கிறது என்று எவரும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் முக அழகை பாதுகாப்பதில் மிகவும் கவனத்தோடு செயல்படுகிறார்கள்.

முகத்தை பிரஷ்ஷாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள எண்ணற்ற பொருட்களை அதிகளவு பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பியூட்டி பார்லருக்கு சென்று முக அழகை மெருகேற்றிக் கொள்கிறார்கள்.

 அந்த வகையில் இன்று உங்கள் முக அழகைப் பராமரிக்க எளிமையான வழியில் அதை உங்கள் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய குங்குமப்பூ ஃபேஸ் பேக் பற்றி தெரிந்து கொள்ளலாமா.

குங்குமப்பூ ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்

1.குங்குமப்பூ சிறிதளவு

2.இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் அளவு பால்

3.ரோஸ் வாட்டர்

செய்முறை

குங்குமப்பூவை எடுத்துக்கொண்டு அதை மருந்து கல்லில் நன்கு உரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனோடு பாலினை சேர்த்து உரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த உரைத்திருக்கும் கலவையை பஞ்சினால் எடுத்து உங்கள் முகம் முழுவதும் அப்ளை பண்ண வேண்டும்.

 எந்த கலவையானது சுமார் அரை மணி நேரம் அளவு உங்கள் முகத்தில் இருக்க வேண்டும். இது உலர்ந்த பிறகு நீங்கள் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவி விடுங்கள். இதனை அடுத்து ரோஸ் வாட்டரை பஞ்சால் நனைத்து உங்கள் முகம் முழுவதும் லைட்டாக ஒற்றி எடுக்க வேண்டும்.

 இதுபோல தொடர்ந்து நீங்கள் செய்வதால் உங்கள் முகம் பளபளப்பாக பார்ப்பதற்கு சினிமா ஸ்டார் போல ஜொலிக்கும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை நீங்கள் பின்பற்றி வருவதன் மூலம் மிக விரைவில் உங்கள் முகம் பொலிவாகும்.

சருமத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி தராத இதுபோன்ற பேஸ் பேக்குகளை உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். உங்கள் மேனி அழகையும் மெருகேற்றலாம் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …