தொங்க தொங்க தாலி..! கணவர் ரெடின் கிங்ஸ்லியுடன் ஹாயாக ஹனிமூன் சென்றுள்ள நடிகை சங்கீதா..!

என்னது ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரா..? என்று ஷாக்காகி போனார்கள் ரசிகர்கள்.

ஏதாவது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படத்தின் காட்சியாக இருக்கும் என்று பலரும் இதனை கடந்து சென்றனர்.

ஆனால், நேரமாக நேரமாக தான் இந்த விஷயம் நிஜமாகவே நடந்திருக்கிறது. நிஜமாகவே நடிகை சங்கீதாவை கரம் பிடித்திருக்கிறார் காமெடி நடிகர் கிங்ஸ்லி என்ற விவரம் தெரிந்தது.

அதன் பிறகு பலரும் இவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தின் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கான தனி அடையாளத்தை பெற்றார் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

இந்த படத்திற்கு பிறகு இவருடைய மார்க்கெட் எகிரியது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படிப்பட்ட காமெடி நடிகர் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் தேதி மிகவும் எளிமையாக தன்னுடைய சில நண்பர்கள் முன்னிலையில் திடீரென சின்னத்திரை நடிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் ஏற்கனவே காதலித்து வந்திருக்கிறார்கள். நாட்கள் ஆகி கொண்டே இருப்பதால் திருமணம் செய்து கொள்ள முடிவில் திடீரென திருமணம் செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜோடியாக ஹனிமூன் செய்திருக்கக்கூடிய சங்கீதா ரெடின் கிங்ஸ்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை நயன்தாரா திருமணமான புதிதில் எப்படி கழுத்தில் தொங்கு தொங்க தாலி அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டாரோ.. அதேபோல நடிகை சங்கீதாவும் கழுத்தில் இருந்து தொப்புள் வரை தாலியை தொங்கவிட்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam