பல தமிழ் திரைப்படங்களில் நெகட்டிவ் வேடங்களில் நடித்து வருபவர் சாய் தீனா விருமாண்டி படத்தை தொடர்ந்து விஜய்யின் பிகில்,மாஸ்டர் போன்ற பல படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
சின்ன சின்ன ரோல்கள் என்றாலும் அதை பக்காவாக செய்து பாடி லாங்குவேஜ் இல் கலக்கி வந்த இவரின் குரலும் அதற்கு ஏற்றது போல் இருப்பதால் ரசிகர்கள் இவருக்கு ஏராளமாக இருக்கிறார்கள்.
தற்போது சாய் தீனா அவரது குடும்பத்தோடு புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு சினி உலகத்திற்கு பேட்டி அளித்த இவர் ஜாதி பிரச்சனை பற்றி ஆவேசமாக பேசியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் ஒருவர் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கூட அவர் என்ன ஜாதி என்று கேட்டுவிட்டு தான் மற்றதெல்லாம் நடக்கிறது என்று அவர் வெகு ஆவேசமாக பேசியிருந்தது.
இது அனைவருக்குமே நன்றாக நினைவிருக்கும். இதனைத் தொடர்ந்து கோபத்தில் இருந்த இவர் தற்போது புத்த மதத்திற்கு மாறி உள்ளது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் புத்த மதத்திற்கு குடும்பத்தோடு மாறி இருக்கின்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் புத்தர் அன்பை போதித்த இவர் அன்பை வேண்டி இந்த மதத்திற்கு மாறி இருக்கிறார்.
எந்த அளவுக்கு ஜாதிய கொடுமை இருந்திருந்தால் இவர் புத்தமதத்தை நோக்கி சென்று இருப்பார் என்ற பல கோணங்களில் பேச்சுக்களை பேசி வருகிறார்கள்.
எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் ஆசையே துன்பத்திற்கு அடிப்படை என்று போதித்த புத்தன் வழியில் அனைவரும் சென்று விட்டால் இது போன்ற மதமாற்றங்களுக்கு கூட அவசியம் இருக்காது என்பதை எப்போது மக்கள் உணர்ந்து கொள்வார்களோ தெரியவில்லை.
மேலும் பணத்தைக் காட்டி கிறிஸ்துவ மதத்திற்கும் முஸ்லிம் மதத்திற்கும் மாற்றம் செய்யப்படுபவர்கள் இவர் தற்போது புத்த மதத்தை நோக்கி சென்றிருப்பது ஒரு மாபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்த இருப்பதோடு பணத்திற்கு ஆசைப்படாமல் இருப்பவர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்திவிட்டது.