நடிகர் சிம்புவுக்கு சீரியல் நடிகையுடன் திருமணம்..? யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று லிட்டில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் சிலம்பரசன் @ சிம்பு நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியை எஸ்டிஆர்-க்கு பெற்று தந்தது.

இதனை அடுத்து பத்து தல திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தீனி போட்டு விட்டார். அடுத்து வரும் 48- வது படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடிப்பார் என்ற விஷயம் கசிந்துள்ளது.

தற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் சிம்பு திருமணம் செய்து கொள்ளாத முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். திரை துறையில் வளர்ந்து வரும் போதே இடையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதனை அடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு குறைந்தது.

மேலும் உடல் எடை அதிகரிக்கதின் காரணத்தால் சிம்புவின் திரைப்பட வாழ்க்கை முற்று பெற்று விட்டது என்று நினைத்தவர்களுக்கு, மாநாடு திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார். சிம்பு கிசுகிசுகளுக்கு முற்று புள்ளி வைக்க கூடிய வகையில் தற்போது திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என்ற பேச்சுக்கள் அடிக்கடி எழுந்து வருவதோடு மட்டுமல்லாமல் இவரது குடும்பத்தார் இவருக்கு பெண் பார்த்து வருவதாக தகவல்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் இருந்தாலும் திருமணம் இன்னும் முடிந்த பாடு இல்லை.

இந்நிலையில் நடிகர் சிம்புவை தான் காதலிப்பதாக பாண்டியன் ஸ்டோர் நடிகையின் தங்கை பேட்டி ஒன்றில் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த பேட்டி தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி விட்டது.

சின்னத்திரையில் நடித்து வரும் சாய் காயத்ரியின் தங்கை மதுரா இவரும் சின்னத்திரையில் பிரபலமான நடிகராக விளங்குகிறார். சிம்புவை குறித்து இவர் அளித்த பேட்டியில் பள்ளியில் படிக்கும் போது சிம்பு மீது தனக்கு க்ரஷ் இருந்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் சிம்புவின் பட பாடல்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போதே எனக்குள் ஒரு வேதி மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதனை அடுத்து சிம்புவை நான் ஒரு தலையாக காதலித்து வருகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

சிம்புவை நேரில் பார்த்தால் உடனே ப்ரபோஸ் செய்து விடுவேன் என்று கூறி, அந்த பேட்டியில் ப்ரபோஸ் செய்து மதுரா பேசிய பேச்சு தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் திரும்பத், திரும்ப அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் விஷயமாக மாறிவிட்டது.

இவரின் இந்த ப்ரொபோஸை சிம்பு ஏற்றுக் கொள்வாரா? இல்லை அதற்கு சரியான பதில் அளிப்பாரா? என்பதை இனிவரும் காலங்களில் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam