சிம்பிள் ப்யூட்டி.! – 31 வயசுல இத்தனை கோடி சொத்தா..? – கிறுகிறுன்னு வருதே..!

சினிமாத்துறை பொருத்தவரை கிளாமருக்கும், மேக்கப்புக்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளை பற்றி நமக்கு நன்றாக தெரியும். ஆனால் இந்த இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் தனது இயற்கை அழகால் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சாய் பல்லவி [Sai Pallavi].

படுகர் இனத்தைச் சேர்ந்த இவர் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் ஆக அறிமுகமானார் தனது முதல் படத்திலேயே அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் டாக்டர் பட்டப்படிப்பை முடித்தவர்.

Sai Pallavi

அண்மையில் இவர் சென்னையில் தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். மேலும் இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பிறகு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் கஸ்தூரிமான், தாம் தூம் போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளிலும் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

31 வயதை தொட்டுவிட்ட சாய்பல்லவி 1992 ஆம் ஆண்டு மே ஒன்பதாம் தேதி பிறந்தவர். பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் இவர் எப்போதும் எளிமையாக இருக்கவே விரும்புகிறார்.

Sai Pallavi

 அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் பார்த்த உடனேயே நொடியில் கவரக்கூடிய வசீகரம் இவரிடம் இருப்பதாக அனைவரும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் ஒற்றைப் புன்னகையால் அனைவரையும் கட்டியாலும் திறமை படைத்த சாய் பல்லவி தற்போது டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 இவர் ரவுடி பேபி பாடலுக்கு கவர்ச்சி நடனம் இன்னும் ரசிகர்களின் கண்ணுக்குள் உள்ளது என்று கூறலாம்.இதனை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய இவர் அண்மையில் நடித்த கார்கி திரைப்படம் மிகவும் சிறப்பான திரைப்படமாக அமைந்திருந்தது.

Sai Pallavi

மேலும் இவர் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ் கே 21 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரது சொத்து மதிப்பை பார் கையில் சுமார் 31 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இவரிடம் ஆடி க்யூ 3, மாருதி ஸ்விப்ட் மற்றும் சில சாதாரண கார்கள் உள்ளது.

தற்போது நடித்து வரும் படங்களுக்கு சாய் பல்லவி இரண்டு முதல் மூன்று கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து இவரது சம்பள விபரங்கள் மற்றும் சொத்து விவரத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் வாய் பிளந்து விட்டார்கள் என கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …