“சாய் பல்லவி.. இதை மட்டும் பண்ணா…” – 50 கோடி ரூபாய் கிடைக்கும்..! – அடேங்கப்பா..!

திறமையான நடிகை மற்றும் நடனம் ஆடுபவர் என்ற அடையாளத்துடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

இவர் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் இவரை தென்னிந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக மாற்றியது. அதை தொடர்ந்து தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த அந்த படங்கள் அனைத்துமே இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

ஆனால் தமிழில் மட்டும் இவருடைய படங்கள் ரசிகர் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறுகின்றன. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவி தமிழில் நடிக்கும் படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறுவதாக தெரியவில்லை.

இது ஒரு பக்கம் இருந்தால் கூட நடிகை சாய் பல்லவி கொடுத்த சில அதிர்ச்சிகரமான உண்மை தகவல்கள் ரசிகர்களை வியக்க வைத்திருக்கின்றது. நடிகை சாய் பல்லவி திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் விளம்பர படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையுடன் பயணித்து வருகிறார். மட்டுமில்லாமல் படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே கவர்ச்சியான உடைகளை அணிவேன்.

அந்த கதாபாத்திரத்திற்கு நிச்சயம் கவர்ச்சி உடைய அணிந்தால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தால் அந்த கதை எனக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக கவர்ச்சி உடையில் நடிப்பேன் என்கிறார் நடிகை சாய் பல்லவி.

ஆனால் கண்டிப்பாக விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்ஸர் ஆகவும் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

காரணம் ஒரு 20 ஆண்டுகள் கழித்து என்னுடைய குடும்பத்தினருடன் என்னுடைய குழந்தைகளுடன் நான் நடித்த படங்களை பார்க்கும் பொழுது யாரும் முகம் சுளித்து விடக்கூடாது.

எல்லோரும் மகிழ்ச்சியுடன் எந்தவித முகச்சுழிவும் இல்லாமல் பார்த்து ரசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது என்னுடைய மிகப்பெரிய ஆசை. எனவே ரசிகர்கள் அல்லது என்னுடைய குடும்பத்தினர் முகம் சுழிக்கும் அளவுக்கு எந்த ஒரு விஷயத்திலும் நான் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

இவருடைய கொள்கை இருந்தாலும் கூட வருடத்திற்கு நான்கு படங்கள் நான்கு விளம்பர படங்கள் இரண்டு படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுபவராக ஆட்டம் போடுவது என இவர் செய்தால் வருடத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பாதிக்கக்கூடிய ஒரு நடிகையாக நடிகை சாய் பல்லவி இருப்பார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

நன்கு நடனமாடும் திறமை இருக்க கூடியவர் முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுவதில் ஒன்றும் தவறு கிடையாது. ரசிகர்களும் அதனை விரும்புவார்கள்.

இப்படி விளம்பர படங்கள் மற்றும் ஐட்டம் டான்சராக நடிகை சாய் பல்லவி தன்னுடைய பங்களிப்பை கொடுத்தார் என்றால் அவருக்கு வருடத்திற்கு 50 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள் சினிமா ஜோதிடர்கள்.

Summary in English :

Sai Pallavi is one of the most sought-after actresses in the Indian film industry. She has become an inspiration for many aspiring actors, especially female actors. Her success has sparked a debate about how much money she could make if she were to do an item dance for just one song in a movie and act in commercials. It is said that Sai Pallavi could potentially earn up to 50 crore rupees if she were to take on such roles.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam