“நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..” – சாய் பல்லவி-யை கலாய்க்கும் ரசிகர்கள்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே ரசிகர் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்கிறது.

அதற்கேற்றார் போலவே இவருடைய படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. சமீபத்தில் பிலிம்பேர் விருதுகள் விழாவில் கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

மேலும் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு கிடைத்தது. மொத்தம் இரண்டு பிலிம்பேர் விருதுகளை வாங்கியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

தன்னுடைய இணையப் பக்கத்தில் இதுகுறித்து மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, இது மிகவும் சிறப்பான ஒன்று. ஒரே ஆண்டில் வெளியான 2 படங்களுக்காக நான் பாராபட்டிருக்கிறேன்.

மிகப்பெரிய விஷயமாக இதனை நான் உணர்கிறேன். ரசிகர்களின் அளவில்லாத அன்பு மற்றும் பிரார்த்தனைகள் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் போல உணர செய்கிறது.

மேலும் இப்படியான கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வத்தை தூண்டுகிறது என்று தன்னுடைய மகிழ்ச்சியையும் பூரிப்பையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

மட்டுமில்லாமல் படுக்கையில் தன்னுடைய இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் வைத்தபடி செல்பி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க.. என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …