பீரியட்ஸ் நேரத்துல தான் அதை பண்ணேன்.. சாய் பல்லவி உடைத்த சீக்ரெட்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

தமிழில் இப்போது முன்னணி நாயகிகளில் ஒருவராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்து வருகிறார்.

சாய் பல்லவி

கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை சாய்பல்லவி. இவரது முதல் படம் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம். இதில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறினார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த சாய்பல்லவியின் சொந்த ஊர் நீலகிரியை அடுத்துள்ள கோத்தகிரி. சார்ஜியாவில் மருத்துவம் படித்த சாய்பல்லவி, இப்போது கோவையில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் கொண்ட சிகிச்சை வசதிகள் அடங்கிய மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறார்.

நடனத்தில் ஆர்வம்

சாய்பல்லவி நடிப்பில், படிப்பில் எவ்வளவு ஆர்வம் கொண்டவரோ அதே அளவுக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் மிக்கவர். பிரேமம் படத்திலும் கூட இவரது நடனம்தான் பெரிய அளவில் பேசப்பட்டது.

தமிழில் தாம்தூம் படத்தில் சில காட்சிகளில் சிறிய பெண்ணாக வந்துபோன சாய்பல்லவி ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக மாறுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இவரிடம் உள்ள மற்றொரு ஸ்பெஷல், அதிக மேக்கப்பின்றி இயல்பான தோற்றத்தில் நடிக்கும் ஒரு நடிகை.

ஏனெனில் இவருக்கு அதிக மேக்கப் செய்தால், இது சாய்பல்லவிதானா என்ற கேள்வி எழும் அளவுக்கு இவரது முகத்தோற்றம் வேறு நபர் போல மாறிவிடுகிறதாம்.

கார்கி படத்தில்…

மாரி 2, என்ஜிகே படங்களை தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கார்கி. சிறுமி ஒருவர் கூட்டு பலாத்கார வன்முறைக்கு ஆளாகிறார். இதில் அவரது தந்தை ஆர்.எஸ் சிவாஜியும் குற்றவாளி என்க, தன் தந்தை நிரபராதி. எந்த குற்றமும் செய்யாதவர் என அவரை போலீசாரிடமும், சட்டத்திடமும் போராடி மீட்கிறார்.

இதையும் படியுங்கள்: ஷகீலா பிட்டு பட நடிகையாக மாற காரணம் இதுதான்.. பல நாள் ரகசியம் உடைத்த ஊர்வசி..!

ஆனால் இறுதியில் அவரது தந்தையும் ஒரு குற்றவாளிதான் என்பது தெரிய வந்த மறுநிமிடம், அவரே தன் தந்தையை குற்றவாளி என போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார். இதில் சாய்பல்லவி நடிப்பு மிகவும் தனித்துவமாக இருந்தது.

பீரியட் நேரத்தில்…

சாய்பல்லவி அளித்த ஒரு நேர்காணலில் ஒரு திடுக்கிடும் விஷயத்தை பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது, ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தில் ஒரு கிளாசிக்கல் பாட்டுக்கு நான் டான்ஸ் ஆடியிருப்பேன். அந்த பாடலை தவிர, நான் படங்களில் நடனமாடிய எல்லா பாடல்களுமே நான் பீரியட் நேரத்தில் இருந்த போது எடுக்கப்பட்ட நடன காட்சிகள்தான்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

தனுஷூடன் நான் நடித்த மாரி 2 படத்தில், ரவுடி பேபி பாடலுக்கு நான் டான்ஸ் ஆடும் போதும் பீரியட்ஸ்சில்தான் இருந்தேன்.

மிகவும் சோர்வாக இருக்கும்

மனதுக்கு பிடித்த வேலையை செய்யும் போது, மூளை அந்த வலியை மறைத்து ஏற்றுக்கொள்ளும். அதனால் அப்போது எனக்கு அந்த கஷ்டம் தெரியாது. ஆனால் நடனம் ஆடிவிட்ட பிறகு, இரண்டு மூன்று நாட்கள் கழித்து எனக்கு மிகவும் சோர்வாக இருக்கும். அப்போது எனது தந்தை தான் என் காலை பிடித்து விடுவார், என்று வெளிப்படையாக தன் உடல் சார்ந்த இயற்கை அவஸ்தை குறித்து பகிர்ந்து இருக்கிறார் சாய்பல்லவி.

ரசிகர்கள் ஆச்சரியம்

பீரியட்ஸ் நேரத்துல தான் நான் டான்ஸ் பண்ணிணேன் என்று சாய் பல்லவி உடைத்த சீக்ரெட்டால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஆனால் அப்போதும் டான்ஸ் ஆடும் போது சாய்பல்லவியின் முகத்தில் அந்த உற்சாகம் குறையவில்லையே, என பாராட்டி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version