கோடி ரூபாய் குடுத்தாலும் இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.. சாய் பல்லவி கறார்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக அறிமுகமாக மிக குறுகிய காலத்திலே மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட பிரபலமான நடிகை தான் சாய் பல்லவி.

இவர் மலையாள சினிமாவில் முதன் முதலில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

நல்ல அழகு நேச்சுரல் பியூட்டி நல்ல உயரம் நேர்த்தியான உடை என ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தனது முதல் படத்திலிருந்து சாய் பல்லவி ஈர்த்துவிட்டார்.

சாய்பல்லவி:

பிரேமம் திரைப்படத்தில் ஜோடியாக நிவின்பாலினி நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததை அடுத்து தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

ஆனால் இதற்கு முன்னர் அவர் மும்மாறியப்படாத பல ரோல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ஆம் தாம் தூம் திரைப்படத்தில் கங்கனாவின் தோழியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேமம் படத்திற்க்கு பிறகு இவர் தமிழில் கரு என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

தொடர்ந்து கனம் , மாரி 2, என் ஜி கே மற்றும் கார்க்கி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சாய் பல்லவி நடித்திருக்கிறார்.

நேச்சுரல் அழகி சாய் பல்லவிக்கு:

நேச்சுரல் அழகியாக எந்த ஒரு மேக்கப்பும் பெரிதாக போட்டுக் கொள்ளாமல் தனது லாங் ஹேர் வைத்துக் கொண்டு நேர்த்தியான உடையான சேலை மட்டும் அணிந்து கொண்டு விருது விழாக்களில் வந்து போகும் சாய்பல்லிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது சாய்பல்லவி குறித்த ஒரு சுவாரசியமான மிகச்சிறந்த ஒரு நல்ல விஷயம் தற்போது செய்தியாக வெளியாகி ஆச்சரியமாக பேசப்பட்ட வருகிறது .

ஆம், பொதுவாக நடிகர், நடிகைகள் என்றால் தீங்கு விளைவிக்கும் விளம்பரமாக இருந்தாலும் கூட கோடி கணக்கில் பணத்தை வாரி இறைத்தால் ஓடோடி போய் நடித்து விடுவார்கள்.

அந்த அளவுக்கு தான் இப்போது சினிமா நட்சத்திர பிரபலங்கள் இருந்து வருகிறார்கள். ஆனால் எத்தனை கோடி நீங்கள் கொடுத்தாலும் நான் இது போன்ற விளம்பரங்களில் நடிக்கவே மாட்டேன் என நிராகரித்திருக்கிறார் சாய் பல்லவி.

கோடி ரூபாய் குடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்:

அதாவது. கடந்த 2019 ஆம் ஆண்டு அழகு சாதனத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் தங்களது நிறுவனம் ஒன்று தங்களது கம்பெனி விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி அணுகி இருக்கிறார்கள்.

அதற்காக அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. ஆனால் சாய் பல்லவி நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் பரவாயில்லை நான் அதில் அடிக்கவே மாட்டேன் என கூறி கராராக மறுத்து விட்டாராம்.

காரணம் சாய் பல்லவி ரியல் லைஃபில் கூட மேக்கப் போட்டுக் கொள்ளவே மாட்டார். அவர் மேக்கப் விரும்பாத நபர்.

அத்துடன் அவர் ஒரு மருத்துவர் என்பதால் அழகு சாதன பொருட்களால் சருமத்திற்கு ஏற்படும் ஆபத்து குறித்து அவர் நன்கு அறிந்தவர் என்பதால் அது போன்ற பொருட்களுக்கும் பிராண்டுகளுக்கும் அவர் விளம்பரம் செய்ய விரும்பவே இல்லையாம்.

அதை நான் விளம்பரம் செய்தால் என்னை நம்பி என்னுடைய ரசிகர்கள் பல பேர் ஏமாந்து விடுவார்கள் என்பதற்காக அதை நிராகரித்துவிட்டாராம் சாய் பல்லவி.

இந்த காலத்தில் இப்படி ஒரு நடிகையா என சாய் பல்லவியை பார்த்து பலர் வியந்து கமெண்ட் செய்து அவரது செயலை பாராட்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version