Site icon Tamizhakam

கவர்ச்சிக்கு நோ சொன்ன சாய் பல்லவியா இது..? அலேக்காக தூக்கி சுற்றும் இளம் நடிகர்..!

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக மிக குறுகிய காலத்திலேயே ஃபேமஸ் ஆனவதான் நடிகை சாய் பல்லவி .

ஒரே படத்தில் ஓஹோன்னு புகழ் பெற்ற சாய் பல்லவி மலையாளத்தில் முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்ட பிரேமம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

நடிகை சாய் பல்லவி:

இத்திரைப்படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாநாயகியாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார் இவரது நேச்சுரலான அழகும், சிம்பிளான தோற்றமும், எதார்த்தமான நடிப்பும் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.

இத்திரைப்படத்தில் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் , மடோனா செபஸ்டின் உள்ளிட்டோர் சாய் பல்லவியுடன் இணைந்து நடித்திருந்தார்கள் .

அவர்கள் அனைவருமே அறிமுக நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது . அந்த மூன்று ஹீரோயின்களுக்குமே பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய அடையாள படமாக அமைந்துவிட்டது.

அடையாளத்தை கொடுத்த பிரேமம்:

அந்த அளவுக்கு மெகா ஹிட் அடித்து மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் புரிந்தது. பிரேமம் திரைப்படம் அவரும் வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது.

பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு சாய் பல்லவி மீதான கவனம் ரசிகர்கள் மீது விழ அடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியது .

தமிழில் முதன் முதலில் 2017ல் வெளிவந்த ‘கரு’ திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து அறிமுகமானார். முன்னதாக இவர் 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் திரைப்படத்தில் கங்கனாவின் தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

அதற்கு முன் அவர் நடன கலைஞராக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான டான்சராக பார்க்கப்பட்டார்.

ஹிட் தமிழ் படங்கள்:

அதன் பிறகு தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பிரேமம் படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

பின்னர் தொடர்ச்சியாக தமிழில் மாரி 2, கனம், என்.ஜி.கே ,கார்க்கி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

மாரி 2 திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ரவுடி பேபி திரைப்படத்தின் மூலமாக உலக புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக இவரது நடனம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்தது. சிறந்த நடிகையாக நடனத்திலும் அசத்தி வந்த சாய் பல்லவிக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

அலேக்கா தூக்கிய இளம் நடிகர்:

தற்போது தெலுங்கில் நடிகர் சர்வானந் நடிப்பில் வெளியான் “Padi Padi Leche Manasu” என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

கவர்ச்சி உடை அணிவதை தவிர்க்கும் சாய் பல்லவி சாதரண உடையிலேயே கவர்ச்சி காட்ட முடியும் என்பதை நிருபித்துள்ளார்.

சாய் பல்லவியை அலேக்காக தூக்கி சுற்றும் சர்வானந்தின் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை கண்ட ரசிகர்கள் “கவர்ச்சிக்கு நோ சொன்ன சாய் பல்லவியா இது?’ என்னமா இப்படி இறங்கிட்ட? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version