என் முடி அடர்த்தியாக இருக்க காரணம் இது.. ரகசியம் சாய் பல்லவி..!

தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் சிறப்பான நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் சாய் பல்லவி. 1992 இல் பிறந்த இவர் மிகச்சிறந்த நடன கலைஞராகவும் திகழ்கிறார்.

இவர் மலையாளத்தில் வெளி வந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார். இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டில் வெளி வந்த கலி திரைப்படத்தில் துல்கர் சன்மானோடு இணைந்து நடித்திருந்தார்.

நடிகை சாய் பல்லவி..

கொங்கு தமிழ் பேசும் கோயமுத்தூரில் படுகர் குடும்பத்தில் பிறந்த இவர் மருத்துவ படிப்பை படித்து முடித்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சிகள் பங்கேற்றதை அடுத்து 2005 ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளி வந்த கஸ்தூரி மான் மற்றும் 2008-ல் ஜெயம் ரவி நடிப்பில் வெளி வந்த தாம் தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை 2018-இல் கரு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது தான் இவரது முதல் தமிழ் படம். இதனை அடுத்து மாரி 2, என் ஜி கே கார்கில் போன்ற படங்களில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்களின் மனதில் தேவதையாக வாழ்ந்து வருகிறார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் அதிக அளவு நடித்து வரக்கூடிய சாய் பல்லவி சினிமாவில் அதிகளவு கவர்ச்சி காட்டாமல் எதார்த்தமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

முடி அடர்த்தியா இருக்க காரணம்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி பேட்டிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களை அசர வைப்பார். அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் இவர் மேனி அழகுக்கு காரணம் என்ன என்று கேட்கப்பட்டதோடு அவர் சொன்ன பியூட்டி டிப்ஸ் அனைவரும் ஃபாலோ செய்யக் கூடிய விதத்தில் உள்ளது.

பார்க்கும் போதே மனதில் தென்றல் காற்றை பீல் செய்யக்கூடிய வகையில் சாய் பல்லவியின் சிரித்த முகம் மங்களகரமாக இருக்க காரணம் அவர் அடிக்கடி மஞ்சள் மற்றும் தேன் இவற்றை பயன்படுத்துவது தான். மேலும் இதனை பயன்படுத்துவதன் மூலம் அவருக்கு அதிகளவு முகப்பரு வருவதில்லை என்று சொல்லி இருக்கிறார்.

இயற்கையான பொருட்களைக் கொண்டே தனது முக வசீகரத்திற்கும், முக ஜொலி ஜொலிப்பிற்கும் கூடுதல் அழகு சேர்த்திருக்கும் இவர் மஞ்சள், தேன் மட்டுமல்லாமல் தயிரையும் பயன்படுத்துவதாக சொல்லி இருக்கிறார்.

அத்தோடு இவர் நீளமான கருமையான கூந்தலின் ரகசியம் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து பேசியதை பார்த்து இன்றைய இளம் கன்னிகள் அனைவரும் இதனை ஃபாலோ செய்வார்கள் என்று ஆணித்தரமாக சொல்லலாம்.

ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

அப்படி இவரது தலைமுடி அடர்த்தியாக இருப்பதற்கு காரணம் தலைக்கு குளித்த பிறகு சீப்பினை வைத்து சிக்கெடுக்காமல் கையிலே சிக்கெடுக்க கூடியவர். வாரத்தில் இரண்டு முறை தேங்காய் எண்ணெயை நன்கு தலையில் தேய்த்து தலைக்கு குளிப்பதால் தான் தனது தலைமுடி அடர்த்தியாக உள்ளது என்ற கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் தற்போது அவர்களது கூந்தல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் முக பொலிவுக்கு கொடுத்த டிப்ஸ் கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த விஷயமானது பெண்கள் மத்தியில் வைரலாக பரவி வருவதோடு இந்த விஷயத்தை இன்று முதலே செய்து விடுவோம் என்ற ஆவலில் இருக்கிறார்கள். அத்தோடு இந்த விஷயத்தை அவர்கள் தோழிகளுக்கும் சொல்லி வருகிறார்கள்.

எனவே நீங்களும் அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்று விரும்பினால் கட்டாயம் சாய் பல்லவியின் டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும்.இதுவரை யாருமே சொல்லாத ரகசியத்தை தற்போது சாய் பல்லவி பகிர்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version