சூர்யாவுடன் நான் இருப்பது போன்ற புகைப்படம்.. ஜோதிகாவை பார்த்துட்டு எனக்கு பேச்சே வரல.. சாய்பல்லவி ஓப்பன் டாக்..

மலையாளத்தில் பிரேமம் என்ற படம் மூலம் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. இவர் டாக்டருக்கு படித்தவர். கோவையில் சொந்தமாக நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறார்.

சாய்பல்லவி கோயம்புத்தூரை சேர்ந்தவர். நீலகிரியை அடுத்துள்ள கோத்தகிரியில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஆனது. அவரது காதலரை திருமணம் செய்ய, பெற்றோர் சம்மதித்து விட்டனர்.

சாய் பல்லவி

சாய்பல்லவி இதுவரை சிறந்த நடிப்புக்காக 4 முறை பிலிம்பேர் விருது பெற்றிருக்கிறார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றிருக்கிறார்.

தமிழில் சாய் பல்லவி மாரி 2, என்ஜிகே, பாவ கதைகள், கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடிப்பதில் சாய்ப்லலவி மிகுந்த ஆர்வமாக இருந்து வருகிறார்.

தாம் தூம்

இவர் பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பே தமிழில் கஸ்தூரி மான் மற்றும் தாம்தூம் படங்களில் சில நிமிடங்கள் வந்து செல்லும் சிறிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் சாய்பல்லவி நடித்த பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தன. அதனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்தன.

இதையும் படியுங்கள்: எலும்பே உடஞ்சி போச்சு.. அந்த இடத்தில் ஆக்ரோஷமாக தாக்கிய நடிகர்.. ஓப்பனாக கூறிய வரலட்சுமி சரத்குமார்..!

சூர்யா பத்தி சொல்லணும்

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது சாய்பல்லவி கூறியதாவது,

சூர்யா பத்தி ஒரு விஷயம் சொல்லணும். இந்த படத்தில் அவரும் ஒரு பாகமாக இருக்கிறார். ஒருமுறை ஒரு பிக்சர் எனக்கு அனுப்பினார். அது சூர்யா கூட நான் எடுத்துக்கிட்ட ஒரு புகைப்படம். அந்த டப்பிங் ஸ்டுடியோவில் சூர்யா இருந்தாங்களா என நான் கேட்டேன். எனக்கு தெரியலை. சூர்யா அந்த படத்துல இருக்கிறார் என்பது.

நான் என்னோட இன்னொரு படம் பிரமோஷன்ல இருக்கும்போது சூர்யா போன் பண்ணினார்.இங்க கொஞ்சம் வந்துட்டு போறீங்களா, இங்கு ஒரு குட்டி பிரஸ்மீட் நடக்கப் போகுதுன்னு சொன்னார். அவ்வளவுதான் எனக்கு தெரியும்.

ஜோதிகா பின்னாடி

பட், அப்புறம் ஒரு லொக்கேஷனுக்கு வந்தோம். ஒரு வீடு மாதிரி இருந்துச்சு. எல்லாம் சரி. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு. அப்போ ஜோதிகா பின்னாடி இருந்து வந்தாங்க. அதை பார்க்கவும் ரொம்ப சர்ப்ரைஸ்சாக இருந்துச்சு.

இதையும் படியுங்கள்: சாப்பிட மாட்டேன்ன்னு சொல்லிட்டு மாட்டுக்கறியை வெளுத்து கட்டுனா.. VJ மகாலட்சுமி குறித்து ரவீந்தர்..!

திடீருன்னு அவங்க வந்த உடனே எனக்கு பேச்சுக்கூட வரலை. அன்னிக்கு அவங்களை தேங்க்ஸ் பண்ண முடிஞ்சதா, இல்லையான்னு கூட தெரியலை. அங்க இருக்கிற பிக்சர்ஸ்ல எல்லாம் நான் சிரிச்சேனா, இல்லையான்னு கூட தெரியலை. ஏன்னா அன்னிக்கு நான் பிளாங்க்காக இருந்தேன் என்று கூறியிருக்கிறார் சாய் பல்லவி.

எனக்கு பேச்சே வரவில்லை

சூர்யாவுடன் நான் இருப்பது போன்ற புகைப்படங்களில் சிரிச்சேனா என்று கூட தெரியவில்லை. ஜோதிகாவை திடீரென பார்த்துட்டு எனக்கு பேச்சே வரவில்லை என்று சாய்பல்லவி ஓப்பனாக இதில் கூறியிருக்கிறார். இது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version