படப்பிடிப்பில் அதை திருட்டுத்தனமான எட்டிப்பார்த்த சாய் பல்லவி.. விளாசிய இயக்குனர்..!

பிரேமம் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை சாய் பல்லவி. இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

முதல் திரைப்படத்தில் ஏகோபித்த வரவேற்பு பெற்ற நடிகை சாய் பல்லவிக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமா அளவில் ரசிகர்கள் பெருகினர் .

நடிகை சாய்பல்லவி:

குறிப்பாக இந்த திரைப்படத்தில் மிகவும் நேச்சுரலாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் ஒட்டுமொத்த வாலிப வட்டமும் சாய் பல்லவிக்கு ரசிகர்களாக மாறினார்கள்.

இத்திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்ததோடு முதல் படமே ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

அதை அடுத்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் சாய்பல்லவிக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியான சமயத்தில் நடிகை சாய் பல்லவி குறித்து பிரபல குணச்சித்திர நடிகையான உமா சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் .

குணச்சித்திர நடிகையான உமா செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த என் ஜி கே திரைப்படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடித்து எல்லோரும் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது .

NGK திரைப்படத்தில் சாய்பல்லவி:

இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் சாய் பல்லவி.நடிகை உமா சாய்பல்லவி உடன் நடித்த அனுபவத்தை குறித்து பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும், திறமை வாய்ந்த இயக்குனராகவும் இருந்து வரும் செல்வராகவன் மற்ற இயக்குனர்களைப் போல சில விஷயத்தில் இருக்க மாட்டார்.

அவர் சற்று கொஞ்சம் மாறுபட்டு தென்படுவார். ஆம் பல இயக்குனர்கள் படப்பிடிப்பு காட்சி நடக்கும்போது அவர்களுடைய மானிட்டரை ஹீரோயின் மற்றும் ஹீரோக்களுக்கு காண்பிப்பார்கள்.

இது போன்ற உங்களது காட்சி உள்ளது….இன்னும் சிறப்பாக நடியுங்கள் என மானிடரை பார்த்து பார்த்து நடிக்க சொல்வார்கள்.

ஆனால், இயக்குனர் செல்வராகவன் பொறுத்தவரை அதற்கு அப்படியே ஆப்போசிட் ஆனவர். ஆம் அவர் எந்த ஒரு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் தன் மானிட்டர் பக்கமே அனுமதிக்க மாட்டார்.

அப்படித்தான் நாங்கள் என்ஜிகே திரைப்படத்தில் நடித்த போது படத்தின் ஹீரோவான சூர்யாவையே அவர் பார்க்க அனுமதித்ததில்லை.

திருட்டுத்தனமா எட்டி பார்த்த சாய் பல்லவி:

அந்த பக்கம் நாங்கள் யாரும் போகவே முடியாது . அப்படி ஒரு முறை நடிகை சாய் பல்லவி தன்னுடைய முகம் மற்றும் கேரக்டர் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கும் ஒரு ஆர்வத்தில் மானிட்டர் பக்கம் சென்று. மானிட்டரை எட்டி பார்த்திருக்கிறார்.

உடனடியாக அங்கு வந்த செல்வராகவன் நோ நோ இது என்னுடையது யாரும் இந்த யாரும் இந்த பக்கம் வரவே கூடாது என கரராக கூறி அனுப்பி வைத்தார் .

உடனடியாக சாய் பல்லவி அடுத்த காட்சிக்கு சிரித்துக் கொண்டே தயாரானார். இப்படித்தான் செல்வராகவும் தன்னுடைய திரைப்படத்தின் சூட்டிங் போது மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக நடந்து கொள்வார் என கூறினார் நடிகை உமா.

செல்வராகவன் தற்போது தன்னுடைய மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இப்படத்தின் அப்டேட் மற்றும் படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version