எனக்கு இந்த ட்ரெஸ் தான் வசதியா இருக்கு.. அதையெல்லாம் யோச்சிக்க கூடாது.. ஓப்பனாக பேசிய சாய் பல்லவி..!

தமிழ் நடிகைகளிலேயே குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகையாக நடிகை சாய் பல்லவி இருந்து வருகிறார். மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை சாய் பல்லவி.

பிரேமம் படம் 3 நடிகைகளுக்கு முக்கிய படமாக அமைந்தது. அந்த வகையில் சாய்பல்லவி மலர் டீச்சர் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் அந்த படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தென் இந்தியா முழுவதுமே பெரும் வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து நிறைய மொழிகளில் வாய்ப்புகளை பெற்று நடிக்க தொடங்கினார் சாய்பல்லவி. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு நடனப்பள்ளியில் பயின்று நடனம் ஆடி வந்தார்.

சாய்பல்லவியின் திறன்:

அதனாலயே சிறப்பாக நடனம் ஆட கூடியவராக சாய் பல்லவி இருந்து வருகிறார். இதன் காரணமாகவே அதிகமான திரைப்படங்களில் அவருக்கு நடன காட்சிகள் சிறப்பாக வைக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவில் எவ்வளவு பிரபலமோ அதே அளவு மலையாள சினிமாவிலும் பிரபலமானவர் சாய் பல்லவி.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் தனக்கென தனி இடத்தை சாய் பல்லவி வைத்திருக்கிறார். இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால் பொதுவாக தெலுங்கு சினிமாவிற்கு செல்லும் நடிகைகள் அங்கு கவர்ச்சியாக நடிக்க தொடங்கி விடுவார்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கூட சமீபத்தில் சர்க்காரி வாரிபட்டா என்கிற திரைப்படத்தில் நடித்த பொழுது அதிக கவர்ச்சியாக நடித்திருந்தார். ஆனால் சாய் பல்லவி நிறைய தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தாலும் கூட அதிகமான கவர்ச்சி காட்சிகளில் இதுவரை நடித்ததே கிடையாது.

சாய்பல்லவியின் பழக்கம்:

சாய் பல்லவி அவருக்கு என்று ஒரு ஒழுக்கத்தை பின்பற்றி வருகிறார் அதனாலேயே ரசிகர்களும் அவருக்கு அதிகமாக இருந்து வருகின்றனர். அதேபோல எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சாய்பல்லவி வந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு புடவை கட்டிக் கொண்டுதான் வருவார்.

பெரும்பாலும் இந்த மாதிரியான விருது வழங்கும் விழாக்களுக்கு வரும் நடிகைகள் தேர்ந்தெடுத்து புது வகையான மாடர்ன் உடைகளை போட்டுக் கொண்டுதான் வருவார்கள். ஆனால் சாய் பல்லவி அப்படி செய்வது கிடையாது.

இது ஏன் என்று சாய் பல்லவியிடமே ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி எனக்கு புடவைதான் வசதியான ஆடையாக இருக்கிறது. ஒரு நிகழ்ச்சிக்கு சென்று பேசுகிறோம் என்றால் அங்கு என்ன பேசுகிறோம் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். ஆடை எங்காவது விலகுகிறதா என்று யோசித்து கொண்டிருக்க முடியாது ஒருவேளை மாடர்ன் உடைகளை அணிந்து சென்றால் இந்த பிரச்சனை இருக்கும்.

அதனால்தான் நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் புடவையிலேயே சென்று வருகிறேன் என்று பளிச்சென பதில் கொடுத்திருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version