விவாகரத்தான நடிகருடன் நெருக்கமாக சாய் பல்லவி வெளியிட்ட காதலர் தின வீடியோ..!

நடிகை சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிக்கும் மிக முக்கியமான நடிகையாக இருக்கிறார். இதுவரை நான்குமுறை பிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கிறார். தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளும் பெற்றவர்.

சாய் பல்லவி

கடந்த 2015ம் ஆண்டில் பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் சாய் பல்லவி அறிமுகமானார். அந்த நேரத்தில், அதிகளவில் வசூல் செய்த 2வது மலையாளம் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து காளி, பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, மாரி 2, அதிரன், பாவ கதைகள், காதல், கார்கி போன்ற பல படங்களில் நடித்து, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

பிடா மற்றும் லவ் ஸ்டோரி நடித்த படங்களுக்காக பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார்.

கோத்தகிரியை சேர்ந்தவர்…

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாய் பல்லவி. அவருக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை இருக்கிறார். சமீபத்தில் தான் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பூஜா கண்ணன் தனது காதலரை திருமணம் செய்ய இருக்கிறார்.

கடந்த 2016ம் ஆண்டில் மருத்துவ படிப்பை முடித்த சாய் பல்லவி, அதற்கு பின் மருத்துவர் பயிற்சியை எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, ஷார்ஜிய மொழிகளை சரளமாக பேசத் தெரிந்தவர் சாய் பல்லவி.

சினிமாத்துறையில் நடிக்க வந்த பின்பு, தெலுங்கு படங்களில் அதிகமாக நடிக்க வாய்ப்பு அமைந்ததால், தெலுங்கு மொழி கற்றுக்கொண்டார்.

சாய்பல்லவி குழந்தை நட்சத்திரமாக பல ஆண்டுகளுக்கு முன்பே கஸ்தூரி மான், தாம் தூம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் ஜோடி…

சாய்பல்லவி இப்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர இந்தியன் 2 படத்திலும் சாய் பல்லவி நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடிகர் நாக சைதன்யா, சாய் பல்லவி இருவரும் காதலர் தினம் வாழ்த்து சொல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

காதலர் தின வாழ்த்துகள்

இதில், சாய்பல்லவி ரெயின் கோட் அணிந்தபடி இருக்க, நாக சைதன்யா அவரிடம் தெலுங்கில் பேசி காதலர் தின வாழ்த்துகள் சொல்வதாக அந்த வீடியோ காட்சி உள்ளது.

தண்டல் என்ற படத்தில் சாய்பல்லவி, நாக சைதன்யா இருவரும் ஜோடியாக நடிக்கும் நிலையில், அது படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சியா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விவாகரத்தான நடிகருடன்…

நாக சைதன்யா, நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ம் ஆண்டில் இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், 2021ம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

தற்போது விவாகரத்தான நடிகருடன் நெருக்கமாக சாய் பல்லவி வெளியிட்ட காதலர் தின வீடியோ இப்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version