தனக்கு முன்பே தங்கச்சிக்கு கல்யாணம்.. காரணம் இது தான்.. சாய் பல்லவி வெளியிட்ட பகீர் தகவல்..!

நடிகை சாய் பல்லவி ஒரு மிகச்சிறந்த நடனக்கலைஞர் 2015 ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரை செய்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கோவையைச் சேர்ந்த இவர் ஒரு படுகர் என பெண் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார். இவர் தான் திருமணம் செய்து கொள்ளாமல் தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். இது பற்றிய விஷயங்கள் இணையத்தில் பல்வேறு வகைகளில் பரவி வருகிறது அது பற்றிய பதிவினை பார்க்கலாம்.

நடிகை சாய் பல்லவி..

டாக்டர் படிப்பை படித்து முடித்து இருக்கும் நடிகை சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சிகள் நடந்த உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சிகள் பங்கேற்றிருக்கிறார்.

அடுத்து திரைப்படத் துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் 2005-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரிமான் என்ற படத்திலும், 2008-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: இதனால தான் அப்படி நடிக்க ஒத்துகிட்டேன்.. கதறி அழுத நடிகை சினேகா.. என்ன ஆச்சு..?

மேலும் தமிழில் 2017-ஆம் ஆண்டு கரு என்ற படத்தில் துளசி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் தான் இவரது முதல் தமிழ் படம் என்று சொல்லலாம். இதனை அடுத்து 2018-ஆம் ஆண்டு மாரி 2 படத்தில் ஆனந்தியாக தனுஷோடு இணைந்து நடித்திருந்தார்.

என்ஜிகே படத்தில் கீதா குமாரியாக நடித்த இவரது நடிப்பு வெகுவாக ரசிகர்களின் மத்தியில் பாராட்டு பெற்றதை அடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர் கார்கி படத்தில் 2022-ஆம் ஆண்டு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஓவர் மேக்கப் கவர்ச்சியோ காட்டாமல் இயல்பாக நடித்து வரும் இவரது சிரிப்பை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் படை உள்ளது என்று கூறலாம்.

தனக்கு முன்பே தங்கச்சிக்கு கல்யாணம்..

இந்நிலையில் அக்கா இருக்கும் போது தங்கைக்கு திருமணமா? என்று பலரும் கேட்பார்கள் என்ற அச்சம் சற்றும் இல்லாமல் தனக்கு முன்பே தங்கைக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க என்ன காரணம் என்பதை பற்றி சில விஷயங்கள் கசிந்துள்ளது.

இதில் நடிகை சாய் பல்லவி தங்கையுடைய திருமணம் நடந்தேறியது அக்கா திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் போது தங்கைக்கு ஏன் அவசரம் அவசரமாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு எழுந்ததை அடுத்து தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற தகவலை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் அந்த திருமணத்தை செய்து கொள்வதில் தனக்கு தற்போது உடன்பாடு இல்லை. என்னை வளர்த்து ஆளாக்கி அழகுபார்த்த என்னுடைய தாய் தந்தையை பிரிந்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது என்னுடைய மனம் வருகிறது.

காரணம் தெரியுமா?

மேலும் என்னுடைய தாய் தந்தையை பிரிந்து செல்வதற்கு மனதளவில் சாய்பல்லவி இன்னும் தயாராகவில்லை. எனவே தற்போதைக்கு திருமணம் பற்றிய பேச்சுக்கே என் வாழ்க்கையில் இடம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கள்ள காதலுக்கு மியூசிக் போட வச்சு.. என்னோட வாழ்க்கையே காலி ஆகிடுச்சு.. புலம்பும் இயக்குனர்..

அத்தோடு நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் ஆகும் வரை தங்கை திருமணம் செய்யாமல் இருந்தால் அவளுடைய வாழ்க்கையும் கெட்டுப் போய்விடும் என்பதால் தங்கைக்கு சாய் பல்லவிக்கு முன்பே திருமணம் செய்து விட்டார்கள் என்று அவரைச் சார்ந்த வட்டாரங்கள் கூறி வருகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தனக்கு முன்பே தங்கச்சி கல்யாணம் பண்ண காரணம் இதுதானா? என்று கேள்விகளை எழுப்பி வருவதோடு இப்படி ஒரு பகீரென இருக்கும் தகவலை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த பகீர் தகவல் தான் தற்போது இணையங்களில் அதிக அளவு வெளி வருவதோடு மட்டுமல்லாமல் சாய் பல்லவி திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் இது தான் என்ற ரீதியில் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version