ஒரு புருஷனா.. ஜிவி பிரகாஷ் இதை பண்ணல.. விவாகரத்து குறித்து சைந்தவி..!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஆன ஜிவி பிரகாஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களுக்கு பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இவர் திரைப்பட இசை அமைப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட நடிகர், ஹீரோ இப்படி பண்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார் .

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்:

முதன் முதலில் வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாசுக்கு முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஜிவி பிரகாஷின் இசையை கொண்டாட ஆரம்பித்தார்கள்.

இதனால் அவருக்கு அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் இசையமைக்க கிடைத்துக் கொண்டே இருந்தது. இவரது தாய் மாமாவான ஏ ஆர் ரகுமான் அவர்களின் ஸ்டுடியோவில் சிறுவயதில் இருந்து வளர்ந்து வந்ததால் ஜிவி பிரகாசுக்கு இசையின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

இதனால் மிக இளம் வயதிலேயே இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். தனது தாய் மாமன் ஏ ஆர் ரகுமானின் இசைகளை கற்றுத் தெரிந்து அவருடனே வளர்ந்து வந்ததால் அவரது இசை நுணுக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுத் தெரிந்து அதன் பின்னர் இசையமைப்பாளரானார்.

சூப்பர் ஹிட் படங்கள்:

தொடர்ந்து கிரீடம், பொல்லாதவன், சேவல், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன , குசேலன் , சகுனி , தாண்டவம் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.

இந்த படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைவதற்கு காரணமாக இருந்தவரும் ஜிவி பிரகாஷ் தான். இசையமைப்பாளராக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்த போதே திடீரென ஹீரோவாகிவிட்டார் ஜிவி பிரகாஷ்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த குசேலன் திரைப்படத்தில் சிறிய கேரக்டர் ஒன்றில் நடித்து விட்டுப் போனார் ஜிவி பிரகாஷ்.

நடித்த படங்கள்:

தொடர்ந்து நான் ராஜாவாகப் போகிறேன், ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை , தலைவா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துவிட்டு சென்றார் .

இதனிடையே 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டார்லிங் திரைப்படத்தின் மூலமாக அவர் ஹீரோவாக அறிமுகமானார்.

பேய் கதைகளத்தின் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார் .

காமெடி கதை களத்தில் உருவாகிய அப்படம் மாபெரும் வெற்றி படமாக பார்க்கப்பட்டது. அதை எடுத்து திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாக நடிகராக பார்க்கப்பட்டார்.

இதனிடையே ஜெயில், ஐயங்கரன், கடவுள் இருக்கா குமாரு, பென்சில், 100% காதல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் சைந்தவி என்ற பாடகியை சிறுவயதில் இருந்தே காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

ஒரு புருஷனா ஜிவி பிரகாஷ் இதை பண்ணல:

இவர்கள் மிகச் சிறந்த நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் திடீரென விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இவர்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்ட வரும் நிலையில் சைந்தவி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் வைரல் ஆகி வருகிறது.

அதாவது, நான் ஒரு காலகட்டத்தில் என்னுடைய கணவர் ஆன ஜிவி பிரகாஷினி இசையில் பாடுவதே நிறுத்திவிட்டேன் .

தொடர்ச்சியாக அவருடைய இசையில் பாடி வந்ததால் கணவர் மனைவிக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கிறார் என்ற பேச்சு எழுந்து விட்டது .

அது மேலும் அதிகரிக்க கூடாது என்பதற்காக அவருடைய இசையில் பாடுவதை நிறுத்தி விட்டேன்.நான் ஸ்டூடியோவில் அவரது இசையில் பாட சென்றாலே அவரை என்னிடம் கணவர் மாதிரி எல்லாம் நடந்து கொள்ளவே மாட்டார்.

எப்போதுமே ஒரு நல்ல நண்பராக தான் பழகுவார். கண்டிக்க வேண்டிய இடத்தில் நிச்சயம் கண்டிப்பார். சொல்லப்போனால் மற்ற பாடகர்களை விட என்னை அதிகமாக கண்டித்து வேலை வாங்குவார் என சைந்தவி அந்த பேட்டியில் கூறியுள்ளது வைரலாகியுள்ளது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version