இருக்கும் போது சேத்து வச்சி செஞ்சிடுவாங்க.. மனம் திறந்த ஜீவி பிரகாஷ் முன்னாள் மனைவி..!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் பாடகி சைந்தவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்ததாக பல பேட்டிகளில் கூட தெரிவித்திருக்கிறார்கள்.

ஜி வி பிரகாஷ்:

பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு நட்சத்திர பிரபலங்கள் ஒன்று கூடி திருமணம் செய்து கொண்டனர்.

2020இல் இவர்களுக்கு அன்வி என்ற ஒரு அழகான மகள் பிறந்தார். ஜிவி பிரகாஷ் தமிழில் இசையமைப்பாளரும் பின்னணி பாடகரும் , திரைப்பட நடிகருமாக சிறந்து விளங்கி வருகிறார்.

இவர் முதன் முதலில் இசையமைப்பாளராக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நடிகராக அவதாரம் எடுத்தார் .

ஜிவி பிரகாஷ் வெயில் திரைப்படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த முன்னணி இசையமைப்பாளர் என்ற இடத்தை பிடித்தார்.

குறிப்பாக அவரது இசையில் வெளிவந்த கிரீடம், பொல்லாதவன், சேவல், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சூப்பர் ஹிட் படங்கள்:

தாண்டவம், அசுரன், சூரரை போற்று உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது .

தொடர்ச்சியாக தனுஷ், விஜய், சிவகார்த்திகேயன் இப்படி பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இசையமைப்பாளராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே அவர் நடிகராக ஹீரோவாக அவதாரம் எடுத்து கடந்த 2015 வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலமாக நடிகராக தடம் பதித்தார்.

அந்த திரைப்படம் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதும் அவருக்கு கொடுத்து கவுரவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக ஜிவி பிரகாஷ்:

எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கா குமாரு, புரூஸ்லி, சர்வதாள மையம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன், சிவப்பு மஞ்சள் பச்சை, 100% காதல் வணக்கம் டா மாப்பிள்ளை, பேச்சிலர் , ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்து நடித்துவந்தார்.

இதனிடையே யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளதாக கூறி பிரிந்து விட்டனர்.

இது ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிகச்சிறந்த ஜோடியாக தமிழ் சினிமா ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த இவர்களின் விவாகரத்து எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்றால் சைந்தவி சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தனது மகள் அன்வி குறித்து. பகிர்ந்து கொண்டார்.

என் மகளை விட்டுவிட்டு நான் வேலைக்கு செல்லும் போது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அவள் ஆரம்பத்தில் அழுவாள்.

வச்சி செய்த மகள்:

நான் விட்டுவிட்டு சென்று வந்ததும் விளையாட்டு, பொம்மை என அவள் தன்னை மாற்றிக் கொள்வார். ஆனால் எனக்கு தான் வேலை செய்ய முடியாத அளவுக்கு குழந்தையை விட்டு விட்டு வந்து விட்டேனே என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருக்கும்.

அது மட்டும் இல்லாமல் நான் இல்லாத சமயத்தில் அன்வி ஓரளவுக்கு புரிந்துக்கொண்டு அட்ஜஸ்ட் செய்து கொள்வார்.

அந்த விஷயத்தில் எனக்கு அன்வியை மிகவும் பிடிக்கும் . அதே வீட்டில் இருக்கும் நேரத்தில் வச்சு செய்யும் அளவுக்கு என்னை எல்லா வேலையும் வாங்கி விடுவாள் என ஜீவி பிரகாஷ் மனைவி கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version