அப்போவே வீட்டை விட்டு துரத்தியிருப்பாங்க.. ஜீவி பிரகாஷ் மனைவி ஒரே போடு..!

தமிழ் திரை உலகை பொருத்த வரை நட்சத்திர ஜோடிகள் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் மிகச் சிறந்த பின்னணி பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

நட்சத்திர தம்பதிகளான இவர்கள் பள்ளியில் படிக்கும் போது பல ஆண்டுகளாக காதலித்து அதன் பிறகு திருமணம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தவர்கள். அத்துடன் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் சமீபத்தில் தான் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

ஜீவி பிரகாஷ்..

இசையமைப்பாளர், நடிகர் என்ற பன்முக திறமைக்கு சொந்தக்காரரான ஜீவி பிரகாஷ், ஏ ஆர் ரகுமானின் சகோதரி மகன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

இந்நிலையில் ஜீவி பிரகாஷ் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க இருவரும் பிரிவது தான் ஒன்றே வழி என்று அவர்களது விவாகரத்து பற்றி விவகாரமான முடிவை எடுத்திருக்கிறார்கள்.

பின்னணி பாடகியான சைந்தவி ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த அந்நியன் திரைப்படத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி என்ற பாடலை பாடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்.

மேலும் ஜீவியின் மனைவி வரலாறு, அழகிய தமிழ் மகன், தெய்வத்திருமகள், வெடி, மயக்கம் என்ன, சகுனி, சுந்தரபாண்டியன், நான் சிவப்பு மனிதன், தெறி, அசுரன், சூரரை போற்று, தலைவி, யானை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடலை பாடியிருக்கிறார்.

வீட்டை விட்டு துரத்தி இருப்பாங்க..

இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் ஜீவியின் இசையமைப்பில் வெளி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 11 ஆண்டு கால இவர்களது மண வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்ததை அடுத்து இந்த பதிவானது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இவர்களது பிரிவுக்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது என்ன என்றால் இருவரும் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்தித்து வந்ததாகவும் அந்த பிரச்சனை தற்போது வெடித்து விவாகரத்து வரை சென்று விட்டது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள்.

அத்தோடு ஜீவி பிரகாஷ் படப்பிடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தி குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை. இதனால் தான் இருவர் இடையேயும் அடிக்கடி சண்டை வந்து பிரச்சனைக்கு மூலமாக அமைந்துவிட்டது என்ற விஷயங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் நீங்கள் சம்பாதித்த பணத்தில் முதலில் கார் வாங்குனீர்களா? அல்லது பைக் வாங்குனீர்களா? என்ற கேள்விக்கு கார் தான் வாங்கினேன். அப்படி பைக் வாங்கி இருந்தால் என்னை வீட்டை விட்டு துரத்தி இருப்பார்கள் என கூறியிருக்கிறார்.

ஜீவி பிரகாஷ் மனைவி ஒரே போடு..

எப்போதும் தனது கணவர் ஜீவி பிரகாஷ் மீது அளவு கடந்த காதலை வைத்திருந்த சைந்தவி திடீர் என இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம் யார்? எவர் மீது தவறு உள்ளது.

நீண்ட நாள் கழித்து கிடைத்த குழந்தையை நினைத்தாவது இவர்கள் பிரிவை பற்றி யோசிக்காமல் இருந்திருக்கலாம் என பல்வேறு கோணங்களில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

சினிமாவில் எப்படியும் பெரிய ஹீரோ அந்தஸ்தை அடைந்து விட வேண்டும் என்று நடிப்பில் கவனத்தை செலுத்தி வரக்கூடிய ஜீவி பிரகாஷ் சமூகத்திற்கான சிறப்பான கருத்துக்களை திரைப்படங்கள் வெளிப்படுத்தக் கூடிய இவரே இப்படி நடந்து கொள்ளாமல் கொள்ளலாமா? என்று ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version