ஜனவரி 26 ஆம் தேதி அன்று இந்திய குடியரசு தினம் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு குடிமகனுமே இந்த நிகழ்வினை உற்சாகமாகக் கொண்டாடிய நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் குடியரசு தின கொண்டாட்டம் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தேசப்பற்றை விதைத்து விட்டார்.
தேசியக்கொடி வர்ணத்தில் இருக்கக்கூடிய சாலினை ஒயிட் கலர் சுடிதாரின் மேல் அணிந்து இவரது தேசப்பற்றை வெளிப்படுத்திய விதத்தோடு மட்டுமல்லாமல் காரில் நின்று கொண்டு கொடியினை பக்குவமாக கையில் பிடித்த வண்ணமும் பின் காரை விட்டு இறங்கிய நிலையில் கொடியை அசைக்க விதத்தையும் பார்த்து ரசிகர்கள் அனைவரும் சல்யூட் அடித்து விட்டார்கள்.
இவரின் இந்த புகைப்படத்தை பார்த்ததுமே தேசப்பற்று இல்லாதவர்க்குக் கூடி ஒரு நிமிடம் புல்லரிக்க கூடிய நிலையில் தேசப்பற்றை உருவாக்கி விட்டது என்று கூறலாம். இது போல செலிபிரேட்டி செய்யும் போது சாமானிய இந்தியனுக்கும் தேசப்பற்று பீறிக் கொண்டு வரக்கூடிய அளவு இந்த புகைப்படங்கள் உள்ளது.
சாக்ஷி அகர்வால் பெங்களூரில் மாடலிங் துறையில் ஆரம்பத்தில் படு பிஸியாக இருந்தவர். இவருக்கு அந்த துறையின் உதவியின் காரணமாக திரைப்படத்தின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை அடுத்து இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரோட செய்திருந்தார்.
முதல் படத்திலேயே தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அது மட்டுமல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை தனக்கென்று உருவாக்கிக் கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அண்மையில் நிகழ்ந்த குடியரசு தின விழாவின் போது எடுத்த போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது ரிபப்ளிக் டே ஸ்பெஷல் என்று கூறும் வண்ணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்களை போட்டு இருக்கும் இவர் புதிய பட வாய்ப்புகளை பெறுவார் என்பதை எந்த சந்தேகமும் இல்லை.