“பச்சை சாமை அரிசி முறுக்கு..!” – இப்படி செய்யுங்க..!

அரிசியை உணவில் தொடர்ந்து சேர்த்தி வரும் அனைவரும் அதற்கு மாற்றாக சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. அந்த வரிசையில் சாமை அரிசி முறுக்கு  செய்து சாப்பிட்டால் எப்படி சுவையாக இருக்கும் என்பதை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

saamai murukku

இந்த சாமை அரிசி முறுக்கு செய்வதற்கு பச்சையான சாமை அரிசி நமக்குத் தேவை. எனவே பச்சையாக சாமை அரிசி கிடைப்பவர்கள் கட்டாயம் இந்த முறுக்கு செய்து பாருங்கள். இது கூடுதல் சுவையோடு இருக்கும். மேலும் இது உங்களுக்கு மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிவிடும்.

சாமை அரிசி முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

 சாமை அரிசி ஒரு கிலோ

உளுந்து 200 கி

ஓமம் இரண்டு டீஸ்பூன்

எள் 2 டீஸ்பூன்

தேவையான அளவு உப்பு

பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய்

பூண்டு 10 பல்

கருவேப்பிலை ஒரு பிடி

#image_title

செய்முறை

முதலில் சாமை அரிசி மற்றும் உளுந்தினை தனித்தனியாக நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு இதனை நன்கு கழிந்து விட்டு கிரைண்டரில் போட்டு சாமை அரிசியை நீர் விடாமல் மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கல்லில் உளுந்து பருப்பை போட்டு நீர் சேர்க்காமல் கட்டியான பதத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு இந்த இரண்டு மாவையும் ஒன்றாக கலக்கி தேவையான அளவு உப்பு போட்டு விடவும். பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஓமம், எள் போன்றவற்றை இதனோடு சேர்த்துக் கொள்ளலாம்.

saamai murukku

நீங்கள் அரைத்த மாவானது முறுக்கு பதட்டிற்கு கெட்டியாக இருக்க வேண்டும். இதனை அடுத்து நீங்கள் பூண்டு மற்றும் கருவேப்பிலையை மிக்ஸியில் மைய அரைத்து அதை இந்த மாவோடு சேர்த்து நன்கு கலக்கி விடவும். இதனை அடுத்து முறுக்கு புழியும் குழலை எடுத்து அதை எண்ணெயை தடவி இந்த மாவை போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் போதுமான அளவு எண்ணெயை விட்டு எண்ணெய் சூடான பிறகு நீங்கள் முறுக்கு குழாயில் போட்டு இருக்கும் மாவினை அப்படியே புழிந்து விடவும்.

saamai murukku

எண்ணெயில் இந்த முறுக்கு வெந்த பிறகு சற்று திருப்பி போட்டு பொன் நிறமாக வரும் வரை காத்திருந்து எடுத்து விடவும். இப்போது சூடான சுவையான சாமை அரிசி முறுக்கு தயார். நீங்களும் உங்கள் வீட்டில் சாமை அரிசி முறுக்கு செய்து பார்த்து முறுக்கு நல்ல முறையில் வந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …