வெகு வருடங்கள் கழித்து பாலிவுட் பிரபலத்துடன் இணையும் சமந்தா!.. இதுதான் முக்கிய காரணமாம்…

தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் சினிமாவிலேயே பிரபலமான ஒரு சில நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டின் நடிகைகளுக்கு வரவேற்பு என்பது குறைவாகதான் இருக்கும். வேற்று மொழி நடிகைகள்தான் அதிகமாக தமிழ் சினிமாவில் பிரபலம் ஆகி இருக்கின்றனர்.

இருந்தாலும் சென்னையில் பிறந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை சமந்தா பிடித்தார். முதன் முதலாக பானா காத்தாடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் சமந்தா. ஆரம்பத்தில் சமந்தா நடித்த திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது குறைவாகதான் இருந்தது.

தமிழில் படங்கள்:

அடுத்து மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படத்தில் நடித்தார் சமந்தா. அந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நான் ஈ திரைப்படத்தில் நடித்தார் சமந்தா.

அந்த திரைப்படம்தான் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சமந்தாவிற்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆரம்பத்தில் ட்ரெடிஷனலாக நடித்து வந்தாலும் கூட போகப் போக மிகவும் மாடர்னாக நடிக்க துவங்கினார் சமந்தா.

அதிலும் அஞ்சான் திரைப்படத்திற்கு பிறகு அவரது கவர்ச்சி என்பது மிகவும் அதிகரித்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை காரணமாக சினிமாவில் சில காலங்கள் நடிக்காமல் இருந்து வந்தார்.

சர்ச்சையான வெப் சீரிஸ்:

ஆனால் அவருக்கு நடுவிலும் ஒரு சில திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்தார். ஏனெனில் இப்பொழுது எல்லாம் வெப் சீரிஸ்கள் நடிகைகள் அதிகமாக பிரபலமாவதற்கு உதவுகின்றன. அந்த வகையில் சிட்டாடல் என்னும் சீரிஸில் நடித்திருந்தார் சமந்தா.

மேலும் பேமிலி மேன் என்கிற ஒரு வெப் தொடரிலும் நடித்திருந்தார். பேமிலி மேன் வெப் தொடரில் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். மேலும் அதில் அவருக்கு படுக்கையறை காட்சிகளும் இருந்தன.

அதனால் அப்பொழுது அது அதிகமாக பேசப்பட்ட விஷயமாக இருந்தது ஆனாலும் இவ்வளவு சர்ச்சைகளுக்கு பிறகும் சமந்தா வெப் சீரிஸில் நடிப்பதை கைவிடவில்லை. தற்சமயம் உடல்நிலை தேறிவரும் சமந்தா மீண்டும் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஃபேமிலி மேன் வெப் தொடரை இயக்கிய இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி கே இணைந்து தயாரிக்கின்றனர் என்று கூறப்படுகிறது பாலிவுட்டில் பிரபல நடிகரான ஆதித்யா ராய் கபூருடன் இணைந்து இதில் சமந்தா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. நேரடியாக உடல் தேறியவுடன் பாலிவுட்டுக்கு சென்று விட்டாரே சமந்தா என்று இது குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் பாலிவுட் சமந்தாவின் மார்க்கெட்டை இன்னும் அதிகரிக்கும். அதனால்தான் அவர் அப்படி செய்கிறார் என ஒரு பக்கம் கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version