“நீங்க நல்ல அப்பா நம் குழந்தைக்கு” – உன்னால் என் வாழ்க்கை மாறும் கானல் நீராய் சமந்தா வாழ்க்கை!..

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து திரையுலகில் நுழைந்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகளவு ஏற்படுத்திக் கொண்டவர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தற்போது ஒரு பேன் இந்திய நடிகையாக வலம் வருகிறார். அத்தோடு தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து விவாகரத்து பெற்று இருக்கிறார்.

நடிகை சமந்தா..

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடித்து மிகச் சிறப்பான வரவைப்பை பெற்ற நடிகை சமந்தா 2017-ஆம் ஆண்டு நாகசைதன்யா உடன் காதலில் விழுந்து திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இதனை அடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வந்த அவருக்கு மயோசிடிஸ் என்ற நோயின் பாதிப்பு இருந்ததை அடுத்து அதற்காக சிகிச்சைகள் மேற்கொள்ள பல வெளிநாடுகளுக்குச் சென்று தற்போது நோயின் தாக்கத்திலிருந்து சற்று விடுதலை பெற்றிருக்கிறார்.

இதை அடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வரும் இவர் தனது முன்னாள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை அடுத்து விவாகரத்து பெற்ற சமயத்தில் இவர் ஒரு மிகப்பெரிய ஜீவனாம்சத் தொகையை எதிர்பார்த்து தான் அவரை விவாகரத்து செய்கிறார் என்பது போன்ற பேச்சுக்கள் எழுந்தது.

எனினும் நாகார்ஜுனாவின் குடும்பத்திலிருந்து சல்லி பைசா ஜீவனாம்சம் பெறாமல் கெத்துக்காட்டிய இவர் நடிப்பில் கடைசியாக யசோதா என்ற திரைப்படம் வெளிவந்தது.

“நீங்க நல்ல அப்பா நம் குழந்தைக்கு” – உன்னால் என் வாழ்க்கை மாறும்..

மேலும் இவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கு தற்போது இரண்டாவது திருமணம் சோபிதா உடன் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளி வந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்தது.

இதனை அடுத்து எந்தவித வெறுப்பு வெறுப்புகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடிகை சமந்தா இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது நல்ல மனதை பலர் மத்தியில் வெளிப்படுத்துவதை அடுத்து பலரும் இவரை பல்வேறு வகைகளில் பாராட்டினார்கள்.

இந்நிலையில் இணையத்தில் தற்போது நாகசைதன்யா பற்றி சமந்தா கண்கலங்கி பேசிய வீடியோ ஒன்று வேகமாக காட்டு தீ போல் பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

கானல் நீராய் சமந்தா வாழ்க்கை..

இந்த வீடியோவில் நடிகை சமந்தாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவில் உங்களால் நான் கனவு கண்டது போல் என் வாழ்க்கை கட்டாயம் மாறும் என உணர்கிறேன் என்பது போல சமந்தா நம்பிக்கையோடு பேசி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நீங்கள் மிகப்பெரிய மனிதர். அத்தோடு நாம் அழகான குழந்தைக்கு ஒரு நாள் நீங்கள் நல்ல தந்தையாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த உலகில் எந்த ஜென்மத்திலும் எனக்காக உங்களைத் தான் நான் தேர்ந்தெடுப்பேன் என்று பேசிய வீடியோவானது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவர் மனதில் எவ்வளவு கனவோடு இந்த வார்த்தைகளை பேசி இருப்பார். இருந்தும் அவர் வாழ்க்கை கானல் நீராய் மாறிவிட்டதே என்று மனம் வருந்தி பேசி வருகிறார்கள்.

நீங்கள் இந்த வீடியோவை காண விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version