போடு தகிட தகிட..! இயக்குனருக்கு ஓகே சொன்ன சமந்தா..! ஆறு வருஷம் வெயிட்டிங்காம்..!

நடிகை சமந்தா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவிலும் மிக முக்கிய முன்னணி நடிகையாக சமந்தா இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பலமொழி பழங்களின் நடிக்கும் திறமையான சிறந்த நடிகையாக புகழ் பெற்றிருக்கிறார்.

சமந்தா

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சமந்தா என்பது பலரும் அறியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கர்; அம்மா மலையாளி. ஆனால் சமந்தா பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடுதான். சமந்தா துவக்கத்தில் தமிழில் மாஸ்கோவின் காவேரி என்ற படத்தில் தான் அறிமுகமானார். அதுதான் அவர் நடித்த முதல் படம்.

தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், கத்தி. தெறி, சூப்பர் டீலக்ஸ், நான் ஈ, தங்க மகன், காத்துவாக்குல ரெண்டு காதல், சீமராஜா போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

நாக சைதன்யாவுடன் காதல் திருமணம்

கடந்த 2017 ஆம் ஆண்டில் நாகார்ஜுனா – அமலா தம்பதி மகன் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்துக்கு பிறகும், சமந்தா படங்களில் நடித்தார்.

மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளிலும், அதிகமான கவர்ச்சி காட்சிகளிலும் அவர் நடித்ததால் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: என் இரண்டாம் காதலன் தந்த அந்த வலி..! வெளிப்படையாக கூறிய பனிமலர் பன்னீர்செல்வம்..!

ஊ சொல்றியா மாமா… குத்தாட்டம்

இதையடுத்து சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய பரபரப்பை, வைப்பை ஏற்படுத்தினார்.

மயோசிடிஸ் நோய் பாதிப்பு

இந்நிலையில் மயோசிடிஸ் என்னும் தோல் அலர்ஜி நோய் அவருக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார். எனினும் ஏற்கனவே கமிட் ஆன குஷி, யசோதா போன்ற படங்களில் சமந்தா நடித்தார். இப்போது சமந்தா சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் இப்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை தொடர்ந்து, தனது 69 வது படத்தில், எச் வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இதுவே அவரது கடைசி படமாகும். அதன் பிறகு அவர் முழு நேர அரசியல்வாதியாக, அரசியலில் ஈடுபட போகிறார்.

இதையும் படியுங்கள்: ப்பா.. இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. மாடர்ன் உடையில் சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!

விஜய்க்கு ஜோடியாக…

இந்நிலையில் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா, 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜயின் 69வது படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது.

மேலும் அட்லி இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் சமந்தாதான் கதாநாயகி என்ற தகவலும் எழுந்துள்ளது. ஆனால் விஜய் ஜோடியாகவும், அல்லு அர்ஜுன் ஜோடியாகவும் சமந்தா
நடிப்பாரா என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆறு வருடங்களுக்கு பிறகு…

ஏற்கனவே விஜயுடன் 3 படங்களில் நடித்த நிலையில், ஆறு வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா இயக்குனரிடம் ஓகே சொல்லியிருப்பது, விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam