.வதந்திகள் அல்ல …உண்மைதான்… தனக்கு மர்ம நோய் உள்ளதை உடைத்தார் நடிகை சமந்தா…!

வலைதள பக்கங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை சமந்தா சில நாட்களாக எந்த வித பதிவுகளையும் பதிவிடாமல் இருந்தார்.

இதற்கு காரணம் இவரது உடல்நிலையில் ஏதோ கோளாறுகள் உள்ளது என்று சோசியல் மீடியாக்களில் அதிகளவு வதந்திகள் பரவி வந்தது. ஆனால் இது குறித்த எந்த ஒரு விளக்கம் அவர் அளிக்கவில்லை.

 இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு செய்தியில் தனக்கு மையோசிட்டிஸ்  என்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு பிரச்சனை உள்ளது உண்மைதான் என்ற குட்டை உடைத்து விட்டார்.

இது சம்பந்தமாக அவர் சிகிச்சைகள் இருப்பதால் விரைவில் அந்த நோய் குணமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதாக கூறியிருக்கிறார்.மேலும் இந்த நோய் அவ்வளவு சீக்கிரத்தில் குணமாகாது நாட்களை இழுக்கும் என்பதால் அதிக காலம் ஆகும் என்று தெரிகிறது என்று அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 மேலும் சமீபத்தில் தான் இவரது யசோதா பட ரிலீஸ் பற்றிய தகவல்கள் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து இவரது ரசிகர்கள் இந்த படத்திற்கு தங்களது ஆதரவை பெருமளவு கொடுத்திருக்கின்ற இந்த வேளையில் இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் மிகவும் பாதிப்படைந்து இருக்கிறார்கள்.

 மேலும் இவர் யசோதா பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இவரின் ரசிகர்களின் ஆதரவு மற்றும் அன்பு எப்போதும் தன் வாழ்க்கைக்கு தேவை அதன் மூலம் தான் எந்த சவால்களையும் சமாளிக்க கூடிய வழுவை அடைவார் என்று கூறியிருப்பதால் தற்போது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள்.

 இதை அடுத்து இந்த மர்ம நோயிலிருந்து இவர் விரைவில் மீண்டு வருவார் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதோடு இவருக்கு ஆறுதலாக பல கமாண்டுகளையும் செய்து வருகிறார்கள்.

இதை அடுத்து என்னமோ சமந்தாவுக்கு உள்ளது என்று வலைதளங்களில் பேசி வந்த அனைவரும் இந்த செய்தியை பார்த்து அவருக்கு ஆறுதல் சொல்லுவதோடு மட்டுமல்லாமல் தங்களது  ஆதரவு எப்போதும் உங்களுக்கு நிரந்தரமாக உண்டு என்று  கூறி அவரை தேற்றி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam