புதிய நண்பருக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த நடிகை சமந்தா..! வைரலாகும் வீடியோ..!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா அடிக்கடி இணையங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பதில் வல்லவர்.

இந்த நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளதாக பல்வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

நடிகை சமந்தா..

நடிகை சமந்தா பல படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர். இவருக்கு திடீர் என ஏற்பட்ட உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் பங்காரம் என்ற படத்தில் நடிக்கப் போவதாக கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த படத்தின் அறிவிப்பும் வெளி வந்தது.

ஆனால் இந்த படத்தின் இயக்குனர் யார் எப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்ற தகவல்கள் இன்று வரை வெளிவரவில்லை.

பாலிவுட்டில் பல படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு ஹிந்தியில் எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலையில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஷ்மிக்கா மந்தனா உள்ளிட்ட நடிகைகள் பாலிவுட் களம் இறங்கி விட்டார்கள்.

மேலும் திரைப்படங்களில் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்தை பெற்றவர்.

புதிய நண்பருக்கு லிப் லாக் முத்தம்..

இதை அடுத்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்த சமந்தாவை பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளிவர ஆரம்பித்தது கூட உங்களுக்கு ஊடகங்களின் வழியாக தெரிந்திருக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் படுபிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

இந்த வீடியோவில் படு ஸ்மார்ட்டாக காட்சியளித்திருக்கும் நடிகை சமந்தா கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு தனது க்யூட்டான பூனை குட்டிக்கு லிப்பில் கிஸ் அடிக்கக் கூடிய புகைப்படங்கள் வெளி வந்து அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இதை பார்த்து ரசிகர்கள் வயிறு எரிந்து வருவதோடு அந்த பூனைக்குட்டி செய்த பாக்கியம் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

வைரலாகும் வீடியோ..

இதை அடுத்து இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தாறுமாறாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு அதிகளவு லைக் மற்றும் கமாண்டுகளை பெற்றுள்ளது.

கருப்பு நிற பூனைக்குட்டியை பார்த்து அதன் அழகில் மயங்கிய பலரும் பூனைக்குட்டியை இவர் எங்கு வாங்கினார் என்ற கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்கள் அப்படி எழுப்ப காரணம் என்ன தெரியுமா?

அந்தக் கரு நிற பூனைக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் போது அதை பார்த்து பயந்து போன பூனையின் பல்வேறு வகையான ரியாக்சன் களை படு நேர்த்தியாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் உதட்டு முத்தத்தை பெற்றுக்கொண்ட பூனை ஒரு மாதிரியாக பார்க்கும் காட்சிகளை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.

சமந்தா படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் பூனை மற்றும் நாய் குட்டிகளோடு விளையாடி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அத்துடன் கடைசியாக குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் இந்த கியூட் வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை கிளிக் செய்து பூனைக்குட்டியோடு அசத்தலான லிப் லாக் கொடுத்த சமந்தாவை பார்த்து ரசிக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version