இதைத்தான் எதிர்பார்த்தோம்..! – சமந்தா வெளியிட்ட வீடியோ..! – ஆர்பரிக்கும் ரசிகர்கள்..!

தென்னிந்தியாவை பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை 5 வருடங்கள் தொடர்ந்து காதலித்து அதன் பின் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

 எனினும் இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இவர்களது திருமண பந்தத்தில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்தை பெற்றுக்கொண்டு தனித்தனியாக தற்போது வாழ்ந்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து சினிமாவில் தீவிர கவனத்தை செலுத்தி வந்த இவருக்கு திடீரென்று அரிய வகை நோயான மயோசிஸ் என்ற நோய் தாக்கத்தால் அருமையான பாதிப்புக்கு ஆளானார்.

இந்த சூழ்நிலையில் தான் இவர் நடித்த யசோதா படம் வெளிவந்தது. அந்தப் படத்தின் பிரமோஷனுக்கு கூட சரியாக வேலை செய்ய முடியாமல் திணறிய இவர் ஒரு வீடியோவில் தனது நிலையை எடுத்துரைத்தார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்ததோடு கடும் கவலையிலும் ஆழ்ந்தார்கள். இதனை எடுத்து இந்தநோய்க்கான சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கக்கூடிய இவர் தற்போது ஜிம் உடைய அணிந்து வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யக்கூடிய லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த நோயானது தசைகளை தாக்கி தசைகளை வலுவிழக்கச் செய்யக்கூடிய தன்மை கொண்டது என்பதால் இவர் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து தனது தசைகளுக்கு பலத்தை கூட்டுவதற்கான முயற்சியில் தற்போது களம் இறங்கி விட்டார்.

மேலும் இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மீண்டு வா தலைவி உன்னால் முடியும் என்ற வாசகத்தை பதிவிட்டு அவரை ஊக்கப்படுத்தி விரைவில் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ரசிகர் இறைவனை வேண்டி வருவதோடு திரை உலகத்தாரும் இவர் செய்திருக்கக்கூடிய இந்த ஒர்க் அவுட்டை பார்த்து அசந்து விட்டார்கள்.

பலரின் வேண்டுதல்கள் எப்போதும் பலனளிக்கும் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். அந்த விதத்தில் சமந்தாவுக்கும் இந்த நிலை மாறி மீண்டு வருவார் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam