தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் பான் இந்திய நடிகை தான் நடிகை சமந்தா. இவருக்கு 2022 ஆம் ஆண்டு சங்கடங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட நாகசைத்தன்யாவை விவாகரத்து செய்த பின் சினிமாவில் படு பிஸியாக நடித்து வந்த இவர் அரிய வகை நோயால் பாதிப்படைந்தார்.
இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததின் காரணமாக அது நிமித்தமாக இவர் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கண்ட காரணத்தினால் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் நழுவி போனது.
மயோசிடிஸ் என்ற அந்த அரிய வகை நோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த அவர் யசோதா படத்தின் பிரமோஷனுக்காக சில பேட்டிகளை தந்திருந்தார். அந்த பேட்டியில் அந்த நோயின் தாக்கத்தினால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை கண்ணீர் மல்க கூறியது ரசிகர்கள் மத்தியில் கடும் அனுதாபத்தை ஏற்படுத்தியது.
இதை அடுத்து இந்த படம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி வெற்றிகரமாக ஓடியது .திரைக்குச் சென்று அந்த கொண்டாட்டத்தை காண முடியாத நிலைக்கு நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது தென் கொரியாவிற்கு உயர் சிகிச்சைக்காக சென்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனை அடுத்து 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு தற்போது பிறந்தநாள் பரிசாக ஒரு குட் நியூஸ் சமந்தா கூறி இருக்கிறார்.
அந்த நியூஸ் என்னவென்றால் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் சாகுந்தலம் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஆனது வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளிவரும் என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளிவர உள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார்.
மேலும் குணசேகர் இயக்கிய இந்த திரைப்படம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் தற்போது சமந்தாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதோடு மீண்டும் அந்த நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்து திரையுலகை கட்டி ஆள வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருக்கிறார்கள்.