லேடி சூப்பர் ஸ்டார்-க்கு போட்டியாக.. நடிகை சமந்தா-விற்கு புது பட்டம்..! – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சமந்தா ( Samantha ) தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்கிறார். சமந்தா ருத் பிரபு என்பது இவரது முழுப்பெயர். இவரது சொந்த ஊர் சென்னையில் உள்ள பல்லாவரம்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவரது அப்பா தெலுங்கு, அம்மா மலையாளம் என கலப்பு பெற்றோரின் மகள் இவர்.

தெலுங்கு படமான ஏ மாயா சேசவா என்ற படத்தில், சமந்தா அறிமுகமானார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம்தான், தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என சிம்பு– த்ரிஷா நடிப்பில் வெளிவந்தது.

இதிலும்,சின்ன கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். சிறந்த அறிமுக நடிகை என்ற பிலிம்பேர் விருது, இந்த படத்துக்காக சமந்தாவுக்கு கிடைத்தது.பிருந்தாவனம், தூக்குடு, சீதம்மா வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு, அத்தாரிண்டிகி தாரேதி போன்ற இவர் நடித்த தெலுங்கு படங்கள் ஹிட் ஆனதால், தெலுங்கில் முன்னணி நடிகையானார் சமந்தா.

Samantha

இவரது பளிச்சிடும் அழகும், துறுதுறுப்பான பார்வையும், நடிப்பாற்றலும் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. சமந்தாவுக்கு யசோதா என்ற மற்றொரு பெயரும் உள்ளது. சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் இளநிலை வணிகம் படித்தவர். நாயுடு ஹால் விளம்பர மாடலாக, படிக்கும்போதே பணிசெய்திருக்கிறார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா – அமலா மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2017 ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இந்து, கிறிஸ்தவ முறைப்படி இரண்டு விதமாக இந்த திருமணம் நடந்தது. பிறகு, கருத்து வேறுபாட்டால், 2021 ம் ஆண்டில் பிரிந்து விட்டனர்.

Samantha

பானா காத்தாடி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 10 என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி, மெர்சல், 24, புஷ்பா, காத்துவாக்குல ரெண்டு காதல், ஓ பேபி, அஞ்சான், சூப்பர் டீலக்ஸ், நடிகையர் திலகம், யு டர்ன், யசோதா, இரும்புத்திரை, மனம், சீமராஜா, பெங்களூரு நாட்கள், கடல், அச்சம் என்பது மடமையடா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இதில், சில படங்கள் தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டவை. புஷ்பா படத்தில், ஊ சொல்றியா மாமா பாடலில், அயிட்டம் பாட்டுக்கு ஆடி, ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தவர் சமந்தா.

Samantha

கடந்த 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தன்று வரலாற்று கதையை அடிப்படையாக கொண்ட சாகுந்தலம் படம் திரையில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்நிலையில், மயோடினஸ் என்ற தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, கடந்த எட்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி வருகிறார். இன்னும் பூரண குணமாகாத நிலையில், ஒத்துக்கொண்ட படங்களை முடித்துக்கொடுக்க, துன்பத்தையும் பொருட்படுத்தாமல் நடித்து வருகிறார். இந்த படங்களில் நடித்து முடித்த பிறகு, சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி, முழு ஓய்வில் இருக்கவும் சமந்தா முடிவு செய்திருக்கிறார்.

Samantha

இந்நிலையில், சமீபத்தில் வெளியான சாகுந்தலம் படம் திரையிடப்பட்டுள்ள ஒரு தியேட்டர் முன்பு, லேடி தளபதி என்ற பட்டத்துடன், சமந்தாவுக்கு 70 அடி உயரத்தில் ரசிகர்கள் சார்பில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் பட்டப் பெயர் வைத்து அழைக்கும் நிலையில், சமந்தாவுக்கு லேடி தளபதி என பெயர் வைத்துள்ளனர்.

Samantha

ஆனால், இதை விஜய் ரசிகர் பொறுத்துக்கொள்வார்களா அல்லது ஏதேனும் பிரச்னை செய்வார்களா என வரும் நாட்களில் தெரிந்துவிடும். எனினும், லேடி தளபதி என குறிப்பிடும் அளவுக்கு, சமந்தா சினிமாவிலும், நிஜவாழ்விலும் போராடி ஜெயித்துக்கொண்டிருப்பவர் என்பதால் அது அவருக்கு சரியான பொருத்தமான பட்டம்தான் என, இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் கமெண்டில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …