என்னங்க அநியாயம் இது.. அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் பெண்.. தீயாய் பரவும் போட்டோ..

ஒரே மாதிரியான முகத் தோற்றத்தில் ஏழு பேர் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். சினிமாவில் ஏழு பேர் என்ன, 700 பேர் கூட ஒரே மாதிரியாக காட்டிவிட முடியும்.

முதலில் எல்லாம் சினிமாவில் கதாநாயகன் டபுள் ரோல் என்றாலே, எம்ஜிஆர் படங்களில் பாதி, பாதியாக எடுத்த காட்சிகளை ஒன்றாக இணைத்து காட்டி விடுவார்கள். ஒரு எம்ஜிஆர் மற்றொரு எம்ஜிஆரை பார்க்காமல், எங்கோ பேசுவார்.

ஒருவரை ஒருவர் கை குலுக்கும்போது அந்த கைகள் ஒன்று சேராது. ஒருவரை ஒருவர் கட்டிப் பிடிக்கும் போது, எதிரில் உள்ள எம்ஜிஆர் போல் உடையணித்த டூப்பை, உண்மையான எம்ஜிஆர் கட்டிப்பிடித்து அழுவார்.

ஆனால் இப்போதெல்லாம் இந்த டூப் விஷயத்தை கனகச்சிதமாக செய்ய, தமிழ் சினிமாவில் நிறைய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது.

விஜயகாந்தையே திரையில் தோன்ற வைக்க…

அவ்வளவு ஏன், இன்றைய ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இறந்து போன விஜயகாந்தையே திரையில் தோன்ற வைக்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அந்த அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் அசத்திக்கொண்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்: என்னங்க அநியாயம் இது.. அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் பெண்.. தீயாய் பரவும் போட்டோ..

ஆனால் உண்மையில் பிரபல நடிகை ஒருவரை போலவே மற்றொரு நடிகை இருக்கிறார் என்றால் அதை நம்ப முடிகிறதா, என்றால் அது உண்மைதான் என நிரூபிக்கின்றன இந்த புகைப்படங்கள்.

சமந்தா

முன்னணி நடிகை சமந்தா, இப்போது மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துக்கொண்டு இருக்கிறார். சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்த ஆங்கில வெப் சீரிஸ்சில் இந்திய தொடரில் வருண் தவான் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

ஏற்கனவே அவர் கமிட் ஆன சென்னை ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் இருந்து விலகிவிட்டார். அதில் சமந்தா நடிக்க வேண்டிய கேரக்டரில் இப்போது நடிகர் கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

பவித்ரா லட்சுமி

டிவியில் மிக பிரபலமான ஒரு நட்சத்திரமாக இருப்பவர் பவித்ரா லட்சுமி. இவர் விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

நாய் சேகர்

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் படங்களில் அவரது நண்பராக நடித்த, நிஜத்திலும் அவரது நெருங்கிய நண்பரான சதீஷ், நாய் சேகர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் சதீஷ் ஜோடியாக பவித்ரா லட்சுமி நடித்திருந்தார்.

தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் பவித்ரா லட்சுமி நடித்து வருகிறார்.

சமந்தா போலவே…

பவித்ரா லட்சுமியை பார்க்கும் பலரும், நடிகை சமந்தா போலவே இருப்பதாக கூறுகின்றனர். அதேபோல் தெறி படத்தில் ஒரு காட்சியில் சமந்தா அணிந்த அதே புடவை, அதே மேக்கப் கெட்டப்பில் எடுத்த புகைப்படத்தை பவித்ரா லட்சுமி பதிவிட்டது வைரலானது.

இதையும் படியுங்கள்: அமீர் கைது..? சிக்கிய CCTV ஆதாரங்கள்.. அம்பலமான கயல் ஆனந்தி கன்றாவி.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தற்போது எடுத்த மிரர் செல்பி புகைப்படங்களிலும் சமந்தா போலவே இருக்கும் தனது புகைப்படங்களை பவித்ரா லட்சுமி வலைதள பக்கங்களில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

என்னங்க அநியாயம் இது…

என்னங்க அநியாயம் இது.. அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் பெண் பவித்ரா லட்சுமியை பாருங்க என்றபடி தீயாய் பரவுகின்றன அந்த போட்டோக்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam