தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருக்க கூடிய நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்ந்து சமீபத்தில் விவாகரத்து பெற்றுக்கொண்டு தீவிரமாக நடிப்பில் கவனத்தை திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கில் உருவான யசோதா படப்பிடிப்பு முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் இன்னும் திரைக்கு வரவில்லை. இதற்கான காரணம் என்று என்ன என்று அலசிய போது தான் அதன் விவரம் தெரியவந்தது.
இந்த படம் வெளிவர தாமதமானதற்கு காரணம் சமத்தா தான் என்று படக்குழுவினர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். மேலும் இவர் இந்த படத்துக்கான டப்பிங் துவங்கிய முதலே அமெரிக்கா சென்று இரண்டு மாதங்களாக தங்கி விட்டார்.
அவர் தான் நடித்த பல படங்களுக்கு பின்னணி பாடகி சின்மயி தான் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் இவர் நடிகையர் திலகம் என்ற படத்தின் தெலுங்கு பதிப்பான மகாநதியில் சமந்தா சொந்தக்குரலில் பேசியுள்ளார். இந்தக் குரல் ரசிகர்களை கவரவில்லை.
மேலும் இப்போதும் யசோதா படத்தில் தனது சொந்த குரலில் பேசி நடிக்கவே சமந்தா விரும்புகிறார். ஆனால் படக்குழுவினர் வேறு டப்பிங் கலைஞரை வைத்து குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.ஆகையால் குரல் கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
சமந்தா படத்தில் குரல் கொடுத்தால் அது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக இருக்கும் என்று படக்குழுவினர் தயக்கம் காட்டி வரக்கூடிய நிலையில் சமந்தாவுக்கும் இந்த படக்குழுவிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் படக்குழுவும் சமந்தாவும் சமரசமாக சென்று எப்போது இந்த வரலாற்றுக் காவியத்தை திரைக்கு கொண்டு வருவார்கள் என்று இவரது ரசிகர்கள் வேதனையோடு இருக்கிறார்கள்.
எனவே ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொண்டு இவர்கள் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்களா? என்பதை இனி வரக்கூடிய நாட்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.