மோசமான கேள்வி எழுப்பிய ரசிகர்..! – வேற லெவலில் நச்சென பதிலடி கொடுத்த நடிகை சமந்தா..!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் இருக்கக்கூடிய நடிகை சமந்தா தற்போது பெண்களை மையப்படுத்தி வருகின்ற திரைக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

 இவர்  தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனாகிய நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளின் காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

 விவாகரத்துக்கு பிறகு தனது முழு கவனத்தையும் திரை உலக பக்கத்தில் மட்டுமே என கருத்தில் கொண்டு கவனத்தை செலுத்துவரும் இவர் படு பிஸியாக படங்களில் நடித்து வந்தார்.

 அந்த வரிசையில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றது.

 இதற்கிடையில் இவர் அரிய வகை நோயால் பாதிப்படைந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல இருப்பதாக  செய்திகள் வந்துள்ளது.

 இந்த சூழ்நிலையில் தற்போது பெண்களை முதன்மைப்படுத்தும் படங்களாகிய கனெக்ட், ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி போன்ற படங்கள்  திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இது குறித்து பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது.

 இந்த பேனர்களை படம் பிடித்து இணையதளத்தில் பதிவு செய்த ரசிகர் ஒருவர் தமிழ் சினிமா எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளது இதுபோல பத்து வருடங்களுக்கு முன்பு நடந்திருக்குமா என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

 இந்த பதிவினை பார்த்த சமந்தா அந்த ரசிகர்களுக்கு அந்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் பெண்கள் உயர்ந்து கொண்டு வருகிறார்கள் என்று பதிலை பதிவிட்டு விட்டார்.

 அதைப் பார்த்த மற்றொரு நபர் ஆம் பெண்கள் உயர்வதே வீழ்வதற்கு தான் என்ற வாசகத்தை பதிவு செய்திருக்க அதை பார்த்த சமந்தா  அந்த தனி நபர்க்கு வீழ்வதும் மீண்டும் எழுந்து வருவதும் எங்கள் பயணத்தை மேலும் இனிமையாக்குகிறது நண்பரே என்று சவுக்கடி கொடுக்கும் விதத்தில் பதிவிற்கு கூடிய பதிவை பார்த்து அனைவரும் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.

 எவ்வளவுதான் பெண்கள் முன்னுக்குச் சென்றாலும் அதில் ஒரு இக்கு வைத்து பேசுவது ஆண் இனத்திற்கே உரிய ஒரு செயல் என்றாலும் அதை கூட ஒரு தோழியாக பாவித்து அவர் கொடுத்திருக்கும் பதிலின்  நேர்த்தியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam