இப்போ இருக்க பெண்களுக்கு கணவனிடம் இது வேணும்.. இல்லனா கஷ்டம் தான்.. சமந்தா திமிர் பேச்சு..!

தன்னம்பிக்கைக்கும், தலைக்கணத்துக்கும் வித்யாசம் இருக்கிறது. இதை கஜினி படத்தில் நடிகர் சூர்யா மூலமாக, இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அழகான வார்த்தைகளால் சொல்லி இருப்பார்.

அதாவது என்னால் முடியும் என்றால் அது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்று சொல்வது தலைக்கணம் என்றும் கூறியிருப்பார்.

சமந்தா

நடிகை சமந்தாவின் பேச்சு தன்னம்பிக்கை போல தோன்றினாலும், அதில் அவரது தலைக்கணமும் வெளிப்பட்டு இருக்கிறது.

பெண்களை, ஒரு காலகட்டத்தில் ஆண்கள் அடிமையாக நடத்தினார்கள் என்பது உண்மைதான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்களை, சரிசமமாக, அதற்கு ஒரு படியாக மரியாதையுடன் நடத்தும் மனநிலைக்கு ஆண்கள் உயர்ந்து விட்டனர்.

அதே வேளையில், பல குடும்பங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும், ஆண்களை மதிக்காதவர்களாக நடப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

பெண்களின் உழைப்பில்…

இன்னும் பல குடும்பங்களில் பெண்களின் உழைப்பில் வாழும் ஆண்களும் இருக்கவே செய்கின்றனர்.

மனைவி, பிள்ளைகள் வருமானத்தில் காலம் தள்ளும் குடும்பத் தலைவர்களும் இன்னும் சமுதாயத்தில் இருக்கவே செய்கின்றனர். இவர்களில் பலர், மதுப்பழக்கத்துக்கு ஆளானவர்களாகவும் இருப்பர்.

ஆனால் குடும்பம், மனைவி, பிள்ளைகள் என பொறுப்புடன் வாழும் குடும்பத் தலைவர்களும் இருக்கிற நிலையில், நடிகை சமந்தாவின் பேச்சு, சற்று கரடுமுரடாகவே தோன்றுகிறது.

பாதுகாப்பு வேண்டும்

ஒரு நேர்காணலில் நடிகை சமந்தா பேசியதாவது,

ஒரு காலத்தில் பெண்கள் தன்னுடைய கணவரை பொருளாதார ரீதியாகவும் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும் சார்ந்து இருந்தனர்.

இதனால் கணவனுக்கு அடிபணிந்து அவனுடைய குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு பெண்களுக்கு இருந்தது.

ஆனால் தற்போது பெண்கள் அவர்களுடைய பொருளாதார தேவைகளை அவர்களாகவே பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

நண்பனாக வேண்டும்…

எனவே பெண்கள் தன்னுடைய கணவரிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் கணவன் தன்னுடன் ஒரு நண்பனாக இருக்க வேண்டும், நன்றாக பழக வேண்டும் போன்ற விஷயங்கள் பெண்களின் அடிப்படை எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இது இல்லாமல் போகும் போது தான் அங்கே இருக்கும் உறவு கஷ்டமானதாகி விடுகிறது என பேசி இருக்கிறார் நடிகை சமந்தா.

சமந்தா பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவான கருத்துக்களை பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.

கணவரை அடிமைப்படுத்த வேண்டும்…

அதே சமயம் பெண்கள் சொந்தமாக சம்பாதிக்கிறார்கள் தங்களுடைய பொருளாதார தேவையை அவர்களாகவே பூர்த்தி செய்து கொள்கிறார்கள் என்பதற்காக கணவனை தங்களுக்கு நிகராக பார்க்க வேண்டும் என்ற ஆசைப்படுவது தவறு கிடையாது.

ஆனால் கணவரை அடிமைப்படுத்த வேண்டும் என்பது போலத்தான் உங்களுடைய கருத்து இருக்கிறது என விளாசியும் வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version