தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நடிகை சமந்தா சமீபத்தில் அதை தெரிவித்து இருந்தார். மேலும் இந்த நோயிலிருந்து விரைவில் குணமடைவேன் அதற்கான சிகிச்சைகளை தற்போது மேற்கொண்டு வருகிறேன் என்று அவர் கூறியிருந்த விதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவர் தற்போது யசோதா படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் வெளியீடானது வரும் நவம்பர் 11ம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது.
தனது உடல்நிலை காரணத்தால் இந்த படத்துக்கு சரியான வழியில் ப்ரமோஷன் செய்ய முடியாமல் இவர் இருக்கிறார். மேலும் இந்த படமானது தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவர உள்ள நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனமே சமந்தாவின் பேட்டி ஒன்றை எடுத்து அதை யூடியூபில் வெளியிட்டு இருக்கிறது.
தெலுங்கில் அளித்துள்ள தன்னுடைய பேட்டியில் தனது உடல்நிலை பற்றி இவர் கண்ணீருடன் பேட்டி கொடுத்திருக்கிறார். இதனை பார்த்து இவரது ரசிகர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் அவர் சொன்னபடி சிலர் தினங்கள் சில நாட்கள் சில மோசமான நாட்களாக இருக்கிறது என்ற வார்த்தையின் உண்மையான தன்மை தற்போது ரசிகர்களுக்கு விளங்கி விட்டது .
தற்போது இவர் கூறிய அந்த வார்த்தைகள் அனைத்துமே இவர் திரும்பிப் பார்க்கும்போது பல விஷயங்களை கடந்து வந்திருந்தாலும் எவ்வளவு தூரம் இதனோடு இவர் கடந்து வந்திருக்கிறார் என்பது ஆச்சரியமாகவே உள்ளது.
இந்நிலையில் இவரின் இந்த போராட்டம் அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக தான் இருக்கிறது. மேலும் அவர் பேசுகையில் நான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொல்ல விரும்புகிறேன் எனது உடல்நிலை உயிருக்கு ஆபத்தாக உள்ளதாக சில செய்திகளை பார்த்தேன்.
ஆனால் அப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் நான் இல்லை இந்த கணம் வரை நான் இறப்பை பற்றி சந்திக்கவில்லை. எனவே அந்த செய்திகள் உண்மையானது அல்ல என்று நான் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
மேலும் கஷ்டமான நிலையில்தான் இருக்கிறேன். அந்த கஷ்டத்தை நான் தற்போது எதிர்த்து போராடி வருகிறேன். மீண்டும் போராடுவேன் என்று கண்ணீர் மல்க மிகவும் எமோஷன் ஆக பேசி இருக்கிறார்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் சமந்தாவை பார்த்து திரை உலகமே என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறது. மேலும் அவரது இந்தப் பேட்டியில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய பாசிட்டிவான வைப்ரேஷன் காரணமாக நிச்சயமாக அவர் அந்த நோயிலிருந்து மீண்டு வந்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். இதனை பாசிட்டிவாக நாமும் நம்புவோம் என்று கூறுங்கள்.