சமந்தா ருத் பிரபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து தனது அற்புத நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகையாக இவர் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். இவருக்கு யசோதா என்ற மற்றொரு பெயரும் உண்டு.
சென்னையில் தி நகரில் இருக்கும் கோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலம் இந்திய மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பையும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் பட்டப்படிப்பையும் படித்த இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹால் விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை சமந்தா..
இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த ஏ மாய சேசாவே என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடிக்க 2009-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சமந்தாவிற்கு Sify உள்பட்ட பல இணையதளங்களில் மக்களின் மனதை கொள்ளை கொள்பவர் என்ற புகழாரம் சூட்டப்பட்டது.
இவர் ஏ ஆர் ரகுமான் இசையில் கௌதம் மேனன் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலில் நடித்திருக்கிறார்.
தமிழ் திரைப்படங்களை பொருத்த வரை 2010-இல் வெளி வந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நந்தினி கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்க கூடிய இவர் அதே ஆண்டு வெளி வந்த பானா காத்தாடி திரைப்படத்தில் பிரியா கேரக்டரை பக்குவமாக செய்தார்.
மேலும் இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதினை பெற்றிருக்கிறார்.
இதனை அடுத்து அதே ஆண்டில் மாஸ்கோவின் காவேரி தெலுங்கு படமான பிருந்தாவனம் போன்றவற்றில் நடித்த இவர் 2011-இல் நடுநிசி நாய்கள் 2012-இல் நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், 2014-இல் கத்தி, 2015-இல் பத்து என்றதுக்குள்ள, தங்க மகன், தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
நான்காயிரம் கோடி சொத்து வேண்டாம்..
தெலுங்கு வாரிசு நடிகரான நாகச் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக நான்காயிரம் கோடிக்கு அதிபதி ஆன நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து விட்டார்.
இந்நிலையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்குரிய சிகிச்சை வெளிநாடுகளில் எடுத்து வந்த நிலையில் அந்த நோயின் தாக்குதலில் இருந்து சற்று விடுபட்ட நிலையில் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்கு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அத்தோடு தான் விவாகரத்தில் செய்து விட்ட நிலையில் நடிகை சமந்தா ஜீவனாம்சமாக ஒரு ரூபாய் கூட எனக்கு வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டு வீட்டை விட்டு கிளம்பி வந்திருக்கிறார். இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரண்டாவது திருமணம் செய்யும் சமந்தா..
மேலும் நடிகை சமந்தாவும் இது குறித்து எந்த ஒரு மறுப்பையும் தெரிவிக்காத நிலையில் தற்போது பிரபல இளம் நடிகர் விஜய தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக விஷயங்கள் கசிந்துள்ள நிலையில் அவரோடு அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார் என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தவகள்கள் வெளி வந்த நிலையில் இதுகுறித்து விஜய தேவரகொண்டா தரப்பிலிருந்தும் நடிகை சமந்தா சார்பில் இருந்தோ எந்த ஒரு மறுப்பும் வெளியாகாத நிலையில் அக்கட தேசத்து ஊடகங்களில் இந்த விவகாரம் விஸ்வரூபமாய் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் திரையுலகம் கடுமையான அதிர்ச்சிகள் இருப்பதாக சொல்லப்படுவதை அடுத்து விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருப்பதோடு எந்த விவகாரத்தால் திரையுலகமே அதிருது என்ற உண்மையை பகிர்ந்து இருக்கிறார்கள்.