சமந்தா வின் விவாகரத்துக்கு இது தான் காரணமாம் வைரலாக ட்வீட் !

தமிழ் சினிமா திரையுலகில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அதற்குப்பிறகு பானா காத்தாடி போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

அதற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைத்தது விஜயுடன் நடித்த பல படங்கள் ஹிட்டடித்த இதனால் தமிழ் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் தெலுங்கு முன்னணி ஹீரோ நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் நட்பாகி அதற்கு பிறகு அது காதலாக மாறியது. இதையடுத்து இவர்கள் 2017 ஆம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன்  திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின்பும் நடிகை சமந்தா திரைப்படங்களில் நடித்து வந்தார். உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 4 ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் பல புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பாகும் ட்வீட்

சமந்தா நாக சைதன்யா  இந்த விவாகரத்து பற்றி அந்த நேரத்தில் இருந்தே பல பல தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் பாலிவுட்டில் சர்ச்சை விமர்சகராக இருப்பவர் உமர் சந்து இவர் சமந்தாவின் விவாகரத்து குறித்து ஒரு பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

இதில் சமந்தாவை பொறுத்தவரை அவரது கணவர் மிகவும் மோசமானவர் என்றும் மனதளவிலும் உடல் அளவிலும் டார்ச்சர் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சமந்தா கர்ப்பமாக இருந்ததாகவும் வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த சமந்தா விவாகரத்து செய்ததாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். இந்தப்பதிவு தற்பொழுது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் இந்த செய்தியை  பகிர்ந்து வருகிறார்கள்.

இதுபோல பல சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …