“கொத்தமல்லியை கொண்டு மணக்க மணக்க சம்பார புளி..!” – செய்வது எப்படி என பார்க்கலாமா?

சம்பார புளி  வீட்டில் இருந்தால் தயிர் சாதம் மட்டுமே போதும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வேண்டாம் சாதம் என்று கூறுபவர்களையும் அள்ளி எடுத்து சாப்பிட வைத்து கூடிய அற்புதமான பண்டம் தான் இந்த சம்பார புளி.

 உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடிய இந்த சம்பார புளி தற்போது அதிக அளவு வீடுகளில் செய்வதை மறந்து விட்டோம் என்று தான் கூற வேண்டாம்.

 ஊறுகாயை ஓரம் கட்ட கூடிய அளவிற்கு இதன் சுவை இருக்கும். மேலும் நீங்கள் செய்து பல நாட்கள் வரை கெடாமல் அப்படியே வைத்திருந்து பயன்படுத்தக்கூடிய இந்த சம்பாரப் புலியை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.

சம்பார புளி செய்ய தேவையான பொருட்கள்

1.கொத்தமல்லி இலை இரண்டு கட்டு

2.பழைய புளி 250 கிராம்

3.வரமிளகாய் 100 கிராம்

4.கடலைப்பருப்பு 50 கிராம்

5.உப்பு தேவையான அளவு

6.உளுத்தம் பருப்பு 50 கிராம்

7.பெருங்காயம் 50 கி

 செய்முறை

முதலில் எடுத்து வைத்திருக்கும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனை அடுத்து வரமிளகாயை இளம் சூட்டில் வறுத்துக் கொள்ளலாம். இதனை அடுத்து எடுத்து வைத்திருக்கும் இரண்டு கட்டு கொத்தமல்லியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

 இதனை அடுத்து சூடு ஆறிய நிலையில் இருக்கக்கூடிய கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, உப்பு வரமிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

 அதனை அடுத்து நீங்கள் வதக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியையும் நன்கு அரைத்து இவற்றையெல்லாம் ஒன்றாக கலந்து விடவும் கடைசியாக பெருங்காயத்தூளை போட்டு போட்டு நன்கு ஒன்று சேரும் படி ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கலாம்.

 அவ்வாறு முடியவில்லை என்றால் ஆட்டுக்கல்லில் உரலைக் கொண்டு இடிப்பது மிகவும் நல்லது. தற்போது இடித்து வைத்திருக்கும் இந்த கலவையை உருண்டை உருண்டையாக பிடித்து நீங்கள் ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளலாம். இப்போது புளிப்புச் சுவையோடு இருக்கக்கூடிய சம்பார் பொடி தயார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …