ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் சமீரா ரெட்டி. இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் சமீரா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்.
தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வாரணம் ஆயிரம் படம்தான் இவருக்கு முதல்படம். சூர்யாவின் காதலியாக நடித்திருப்பார்.
அடுத்து அஜீத்குமாருடன் அசல் படத்திலும், வேட்டை படத்தில் மாதவனுக்கு ஜோடியாகவும் சமீரா ரெட்டி நடித்திருந்தார். இதில் மற்றொரு ஜோடியாக ஆர்யா – அமலாபால் நடித்திருந்தனர்.
சமீரா ரெட்டி..
சமீரா ரெட்டி தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர் அடிக்கடி தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார்.
அதுமட்டுமின்றி சமூக விழிப்புணர்வுள்ள கருத்துகளை. சில அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார்.
ஆணுறை அவசியம்..
சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில், ஆணுறை குறித்து அனைவரும் தெரிந்து கொள்வதால் ஏதோ தேவையற்ற கர்ப்பம், பால்வினை நோய்கள் பரவுவது தடுக்கப்படுவது மட்டும் தான் பலன் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், அப்படி கிடையாது. தேவையற்ற கர்ப்பம் என்பது இரு குடும்பங்களின் மனநிலையை சூழ்நிலையை ஆட்டிப்படைக்க கூடிய ஒன்று.
அதுவும் திருமணம் ஆகாத காதலன் காதலி இடையே இப்படி ஏதாவது நடந்து விட்டால் மிகப்பெரிய பிரச்சினையாகிவிடும். இதனால் பல்வேறு மோசமான விளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.
எனவே தான் நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்தேன். ஆணுறையின் அவசியத்தை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி.
அதனால் ஆணுறை பயன்படுத்துவதால் பல பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார் சமீரா ரெட்டி.