சமுத்திரகனியின் சொத்து மதிப்பு.. வியப்பில் ரசிகர்கள்.. கார்கள் மட்டும் இத்தனையா..?

தமிழ் திரை உலகில் தனக்கு என்ற ஓர் இடத்தை பிடித்து இருக்கும் இயக்குனர்களின் வரிசையில் இருக்கும் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனியும் ஒருவர். இவர் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி சீரியல்களை இயக்கி இருக்கிறார்.

2003-ஆம் ஆண்டு வெளி வந்த உன்னை சரணடைந்தேன் என்ற தமிழ் படத்தில் சிறந்த கதை வசனத்திற்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்படத்தை பெற்றிருக்கக் கூடிய இவர் 2004 நீ நெறஞ்ச மனசு என்ற தமிழ் படத்தை இயக்கியிருக்கிறார்.

இயக்குனர் சமுத்திரக்கனி..

மேலும் இவர் 2009-இல் நாடோடிகள் 2011-இல் போராளி படத்தையும் இயக்கினார். இந்த போராளி படத்தில் சிறந்த உரையாடல் எழுத்தாளராக விஜய் விருந்தினை வென்றிருக்கிறார்.

இதனை அடுத்து 2014-இல் நிமிர்ந்து நில் 2016-இல் அப்பா போன்ற படங்களை இயக்கிய சமுத்திரக்கனி சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களையும் இயக்கி இருக்கிறார்.

திரைப்படங்களை இயக்குவதோடு நின்று விடாமல் பார்த்தாலே பரவசம், பொய், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், ஈசன், சாட்டை, நீர் பறவை, வேலையில்லா பட்டதாரி, ரஜினி முருகன், அம்மா கணக்கு, அப்பா போன்ற படங்களில் நடிகராக தனது மறு பக்கத்தை காட்டி ரசிகர்களின் மனதை தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் இவர் பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் 2003-ஆம் ஆண்டு அன்னை, தற்காப்பு கலை தீர, ரமணி பகுதி 2, 2005-இல் தங்கவேட்டை, 2007-ல் அரசி போன்ற நெடுந்தொடர்களில் பணி புரிந்திருக்கிறார்.

சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு..

நடிகர் சமுத்திரக்கனி தனது 51 வது பிறந்த நாளை கொண்டாடி வரக்கூடிய சமயத்தில் அவருக்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை உலகை சேர்ந்தவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இவர் ஆரம்ப காலத்தில் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

விசாரணை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்ற சமுத்திரக்கனி எவ்வளவு சொத்துக்கள் வைத்திருக்கிறார் என்பதை இணையங்களில் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இவரது சொத்து மதிப்பு என்ன என்பதை பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம். ஒரு படத்துக்கு நடிப்பதற்கு 25 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறக்கூடிய இவர் எவ்வளவு கோடி சொத்துக்களை வைத்திருக்கிறார் தெரியுமா?

வியப்பில் ரசிகர்கள்..

சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பை பொறுத்த வரை மொத்தம் 20 லிருந்து 25 கோடி ரூபாய் வரை சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரிடம் ஸ்காப்பியோ, ஆடி ஏ 4, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 போன்ற கார்கள் உள்ளது.

இவரது வீட்டின் மதிப்பு மட்டும் சில கோடிகள் வரும் என்று திரைத்துறை சார்ந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பை அறிந்து கொண்டு வியப்பில் இருக்கிறார்கள். மேலும் இந்த விஷயம் தற்போது வைரலாகவும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version