இதனால் தான் படம் எடுக்குறத விட்டுட்டேன்.. சமுத்திரகனி ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன துறைகளில் பணியாற்றி பிறகு உதவியாளராக இருந்து பிறகு இயக்குனர் ஆனவர் சமுத்திரகனி. தற்சமயம் நடிகராக அவர் அதிக பிரபலம் ஆகி இருக்கிறார். மதுரையிலிருந்து பாலா, அமீர், சசிகுமார் 3 பேரும் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பொழுது அவர்களுடன் சமுத்திரகனியும் வந்திருந்தார்.

ஆரம்ப காலகட்டம் முதலே இவர்கள் நான்கு பேரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதனால்தான் மதுரை தொடர்பான திரைப்படங்களை அவர்கள் அளவுக்கு சிறப்பாக மற்ற இயக்குனர்களால் இயக்க முடிவது கிடையாது.

வரவேற்பை பெற்ற சமுத்திரகனி:

தொடர்ந்து சசிகுமார் மற்றும்  சமுத்திரகனி ஆகிய இருவருமே குறைந்த பட்ஜெட்டில் படம் இயக்கும் இயக்குனராகதான் இருந்து வருகின்றனர். முதன்முதலாக சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படம் வெறும் 60 லட்சத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.

சமுத்திரகனியும் சசிக்குமாரை போல குறைந்தபட்சத்தில் படம் எடுக்கக் கூடியவர்தான். தற்சமயம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களின் நிலை என்ன என்பது குறித்து அவர் பேசி இருக்கும் விஷயங்கள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன.

சமீபத்தில் சமுத்திரகனி ஒரு பேட்டியில் பேசும்பொழுது அவர் இயக்கிய திரைப்படங்களின் என்ன மாதிரி பிரச்சனையை சந்தித்தன என்று அது குறித்து பேசி இருக்கிறார்.

குறைந்த பட்ஜெட் படங்கள்:

அவர் இயக்கிய அப்பா திரைப்படமும் சரி நாடோடிகள் திரைப்படமும் சரி மிகவும் ஆசைப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் அவற்றை விற்பனை செய்வதில் நிறைய பிரச்சனைகள் இருந்ததாக கூறுகிறார். மேலும் அப்பா திரைப்படம் வெளியாகி எவ்வளவு வசூல் செய்தது என்ற கணக்கு கூட இப்பொழுது வரை எனக்கு சரியாக தெரியவில்லை என்று கூறுகிறார் சமுத்திரக்கனி.

இந்த மாதிரியான நிகழ்வுகளின் காரணமாக திரைத்துறையில் திரைப்படங்கள் எடுப்பதே பிடிக்காமல் போய்விட்டது. இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுத்த பிறகு அந்த படத்திற்கு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அது சின்ன படம் என்பதால் அதை விற்பனை செய்வதிலும் பிரச்சனை இருக்கிறது என்று மனம் நொந்து பேசி இருக்கிறார் சமுத்திரகனி.

சமுத்திரகனி மட்டுமில்லை தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் படம் இயக்கும் இயக்குனர்கள் பலருக்கும் இருக்கும் பெரும் பிரச்சனை அந்த திரைப்படம் எடுக்கப்பட்ட பிறகு விற்பனையாகுமா என்பதுதான். பெரும் நடிகர்கள் மீது இருக்கும் மோகமே இந்த சின்ன திரைப்படங்களை ஓட விடாமல் செய்கின்றன என்று ஒரு பக்கம் இது குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam