ட்ரெஸ் எங்கம்மா..? உடலோடு ஒட்டிய உடையில்.. இளசுகளை ஏங்க வைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!

தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. சமயுக்தா நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெரும் திரைப்படங்களாக இருந்து வருவதால் தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மூன்று மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

அதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள். ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் பொழுதும் அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை அறிந்து கொண்ட பிறகுதான் அதில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்புக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு பாப்கார்ன் என்கிற மலையாளம் திரைப்படத்தில் அஞ்சனா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சம்யுக்தா. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழில் அறிமுகம்:

தொடர்ந்து 2018 , 2019 ஆகிய வருடங்களில் நிறைய படங்களில் நடித்தார் இதற்கு நடுவே தமிழிலும் களரி என்று ஒரு திரைப்படத்திலும் ஜூலை காற்றில் என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். ஆனால் அப்பொழுதுதான் அவர் அறிமுக நடிகை என்பதால் அந்த திரைப்படங்களில் அவர் அவ்வளவாக தெரியவில்லை.

பிறகு தெலுங்கில் பீம்லா நாயக் என்கிற திரைப்படம் மூலமாக இவர் அறிமுகமானார். பீம்லா நாயக் திரைப்படத்தில் கதாநாயகனாக பவண் கல்யாண் நடித்திருந்தார். அதனால் அந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து அவர் மலையாளத்தில் நடித்த கடுவா என்கிற திரைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திலும் கதாநாயகியாக இவர் நடித்திருந்தார். கதாநாயகனாக முன்னணி நடிகரான பிரித்திவிராஜ் நடித்திருந்தார்.

தனுஷ் படத்தில் ரீ எண்ட்ரி:

இந்த நிலையில் தமிழில் வாத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். வாத்தி திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்ததால் இதுவுமே அவர்களுக்கு வரவேற்பை பெரும் திரைப்படமாக அமைந்தது.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் மூன்று மொழிகளிலும் பெரும் நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்ததால் 2022 மற்றும் 2023. இரண்டு ஆண்டுகள் சம்யுக்தாவிற்கு முக்கியமான வருடங்கள் என்று கூறலாம்.

தொடர்ந்து இப்பொழுது அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக மாறி இருக்கிறார். இதனால் தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமின்றி தற்சமயம் ஹிந்தி திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியிருக்கிறார் சம்யுக்தா. அவர் நடித்து வரும் ஹிந்தி திரைப்படம் ஒன்று 2025 ஆம் ஆண்டு வெளிவர இருக்கிறது.

இந்த நிலையில் அடிக்கடி ரசிகர்களை வசீகரம் செய்யும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சம்யுக்தா சமீபத்தில் அசரவைக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version