அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா செருப்பால அடிப்பேன்… கொந்தளித்த சனம் ஷெட்டி!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவரான சனம் செட்டி மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கி அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்க தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

சனம் ஷெட்டி:

இவர் விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் .

அந்த நிகழ்ச்சி தான் இவருக்கு அடையாளத்தையும் பெயரையும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது. சனம் செட்டி பெங்களூரில் இருந்த போது பல்வேறு மாடலிங் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட இவர் துவக்கத்தில் இரண்டாம் இடத்தை பெற்றார் .

அழகி போட்டிகளில் சனம் ஷெட்டி:

அப்போது முதல் இடத்தை பெற்றவர் மீரா மிதுன் அவரின் மோசடி நடவடிக்கை காரணமாக இவரது பட்டம் ரத்து செய்யப்பட்டது.

அதன் 2016 ஆம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா பட்டத்தை பெற்றார். இவரது மாடலிங் தொழில் வெற்றிகரமாக சென்று கொண்டு இருந்தபோது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.

அதன் மூலம் சினிமாவில் நுழைய ஆரம்பித்தார். முதன் முதலில் சனம் செட்டி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அம்புலி என்ற திரைப்படம் தான் .

அதன் பிறகு மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு தெலுங்கு சினிமா பக்கம் தலையாட்டி அங்கும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் பெரிதாக அவரை பிரபலபடுத்தவில்லை. அதன் பிறகு தான் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

தற்போது தொடர்ந்து கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் நடித்து வரும் சனம் செட்டி நேற்று. பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார்.

கொல்கத்தா பாலியல் பலாத்காரம்:

அப்போது, கொல்கத்தாவில் மருத்துவருக்கு நடந்த கொடூரமான பாலியல் பலாத்கார படுகொலை குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அனுமதி கேட்டு பேட்டி கொடுத்திருந்தார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்கு வந்திருந்த சனம் செட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது… இது மருத்துவமனையில் டாக்டருக்கு நடந்த விஷயம் இல்லை.

ஒவ்வொரு நாளும் இது போன்ற பல விஷயம் பல பெண்களுக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்களுக்கு எங்கேயுமே பாதுகாப்பு இல்லை .

குடும்பத்திற்குள்ளே பாதுகாப்பு இல்லை. குடும்ப நபர்களை கூட நம்ப முடியாத சூழ்நிலையில்தான் பெண்கள் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை கடந்து வருகிறார்கள்.

கடந்த மாதத்தில் ஒரு வாரத்தில் மட்டும் நான்கு வழக்குகள் பதிவாகி இருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த பாலியல் வன்கொடுமைக்காக இங்கு ஏன் போராட வேண்டும்? என்று பல பேர் கூறுகிறார்கள்.

நேற்று கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வன்கொடுமை நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளார்.

எனவே இது அங்கங்கே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. மலையாள சினிமாவில் பாலியல் சீண்டல் தலைவிரித்து ஆடுவதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது .

அதை வெளியிட்ட ஹேமா மேடத்துக்கும் அந்த குழுவினருக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

செருப்பால் அடிப்பேண்டா நாயே:

அட்ஜஸ்ட்மெண்ட் கேரளா சினிமாவில் மட்டும் இல்லை. தமிழ் சினிமாவிலும் இங்கும் இருக்கிறது. என்னிடம் இதுபோல அட்ஜஸ்ட்மென்ட் கேட்டவர்களை அந்த இடத்திலேயே செருப்பாலே நான் அடிப்பேன்டா நாயே என முகத்திற்கு நேராகவே கூறி இருக்கிறேன்.

இதுபோன்று தினம் பாலியல் தொல்லைகள் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதற்காக பெண்களை வெளியில் அனுப்பாமல்.. அந்த ஆடைகளை போடாதே… இந்த ஆடைகளை போடாதே.. யாரையும் நம்பாதே என சொல்லி சொல்லி வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அடிப்படை மாற்றத்தை ஆண்களின் மனதில் கொண்டு வர வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக தான் நான் இந்த போராட்டத்திற்கு அனுமதி கேட்கிறேன்.

இதுதான் சரியான நேரம் அடுத்த தலைமுறையாவது மாற வேண்டும் என சனம் செட்டி பேசியிருந்தார் இந்த பரபரப்பான பேட்டி சமூக வலைதளங்கள் முழுக்க வைரல் ஆகி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version