இந்திய இளைஞர்களின் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவை அடுத்து மாடல் அழகியான சனம் செட்டியின் டீப் பேக் வீடியோவை வெளியிடுவேன் என ட்விட்டர் மூலம் மிரட்டிய நபர் பற்றிய பதிவினை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
சனம் ஷெட்டி..
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சி நாயகியாக வலம் வரும் சனம் ஷெட்டி 2012 ஆம் ஆண்டு வெளி வந்த அம்புலி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர். கர்நாடகாவில் இருக்கும் பெங்களூரில் பிறந்தவர் தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் கலை உலகில் நுழைந்தார்.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 போட்டியாளராக பங்கேற்ற இவர் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த மகா திரைப்படத்தில் கேஸ்ட் ரோல் செய்து இருக்கிறார்.
தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் அதிகளவு வளர்ந்து விட்டதின் காரணத்தால் திரையுலகில் டீப் பேக் வீடியோக்கள் பல நடிகைகளின் உருவங்களைக் கொண்டு எதிர்பாராத அளவு கவர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய அளவு வெளி வந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடரும் Deep Fake தொல்லை
இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்திருக்கும் இந்த டீப் பேக் தொல்லைக்கு முடிவு கட்ட சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சட்டங்கள் கடுமையாக வேண்டும் என்றும் பல பிரபல நடிகைகள் மட்டுமல்லாமல் நடிகைகளும் திரையுலகை சார்ந்தோரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து தற்போது மீண்டும் டீப் பேக் வீடியோ குறித்து அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றினை சனம் ஷெட்டி கூறி இருக்கிறார். ஏற்கனவே ரஷ்மிகாவை தொடர்ந்து பல பிரபலங்களின் டீப் பேக் வீடியோ இணையங்களில் பரவி வைரலானது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து தற்போது சனம் செட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய ட்விட்டர் பதிவில் தனிநபர் ஒருவர் ட்விட்டர் மூலம் தனது டீப் பேக் வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி வருவதாக தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். இதனை அடுத்து தமிழக போலீசார் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அவர் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
இதனை கேள்விப்பட்ட இணையவாசிகள் இணையத்தில் சனம் ஷெட்டியின் ஆபாச வீடியோவா? பிக் பாஸ் சனம் ஷெட்டி என்ன வேலை செஞ்சு இருக்காங்க.. பாருங்க.. என்ற ரீதியில் இதனை பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்த விஷயம் தான் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டதோடு ஏற்கனவே ராஸ்மிகா விசயத்தில் ஆந்திராவில் ஒரு நபரை கைது செய்து டெல்லி கொண்டு செல்லப்பட்டதையும் நினைத்தால் இது போன்ற தவறுகளை செய்ய முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு அந்த தனிநபருக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை பலரும் பதிவு செய்து இருக்கிறார்கள்.
விரைவில் அந்த தனிநபர் யார் என்பதை கண்டுபிடித்து அவருக்கு உரிய தண்டனையை காவல்துறை கட்டாயம் வழங்கும் என நம்பலாம்.
மேலும் இது போன்று இனி வரும் காலங்களில் டீப் பேக் வீடியோ கலாச்சாரத்தை ஒழிக்க கடுமையான சட்ட திட்டங்களை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.