இன்று தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத சிம்மாசனத்தை போட்டு அமர்ந்திருக்கும் தளபதி விஜய் ஆரம்ப காலத்தில் நடிக்கும் போது பல்வேறு வகையான சருக்கல்களை சந்தித்தவர். அந்த சமயத்தில் இவரோடு அதிக அளவு படங்களில் ஜோடி போட்ட நடிகை சங்கவி பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் இருவருது கெமிஸ்ட்ரியும் வெகுவாக ஒர்க் அவுட் ஆன நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்களோ? என்று கேட்கக் கூடிய வகையில் நெருக்கமான காட்சிகளில் படு ஜோராக நடித்திருப்பார்கள்.
விஜய் – சங்கவி..
அந்த வகையில் தளபதி விஜய் மற்றும் சங்கவி கோயமுத்தூர் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் படு நெருக்கமாக நடித்ததை அடுத்து ரசிகர்கள் பல வகைகளில் இவர்களைப் பற்றி கிசுகிசுத்து வந்தார்கள்.
நடிகை சங்கவியும் தமிழில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை அடுத்து இவர் நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்தவர்.
சினிமாவில் நடிப்பதோடு நின்றுவிடாமல் சீரியல்களிலும் நடித்திருக்க கூடிய நடிகை சங்கவி கோகுலத்தில் சீதை, தாய் வீடு போன்ற சீரியலில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
இதனை அடுத்து தனக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து போக 2016 இல் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகி விட்டதோடு மட்டுமல்லாமல் விஜயோடு ஏற்பட்ட கிசுகிசுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
புடவையை இழுத்ததால் பளார்..
அண்மையில் விஜய் டிவியில் வெளி வந்த ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் நடிகை சங்கவி பங்கேற்று வந்தார். அந்த சமயத்தில் அவர் கோயமுத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் சில விஷயங்களைப் பற்றி அவர் பேசும் போது அந்த படத்தில் “ஒரு தேதி பார்த்தால்” என்ற பாடலில் நெருப்பினை முகத்திற்கு குறுக்கே கொண்டு போவது போல ஒரு காட்சி அமையும். அந்த சமயத்தில் விஜய் எனது சேலையை பற்றி இழுப்பார் நான் அவரை ஒரு அறை விடுவேன்.
இந்த காட்சியை பலமுறை பதிவு செய்தார்கள். ஆனால் சரியாக அமையவில்லை. ஒரு முறை மண்ணெனையை ஊற்றியும் பார்த்தார்கள் அப்போதும் சரியாகவில்லை. பின்னர் எனது புடவையில் மண்ணெனையை ஊற்றினார்கள். அது பக் என்று பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. அப்போது பயத்தில் இருந்த நான் அருகில் இருந்த விஜய்யை பளார் என்று ஓர் அறை விட்டேன்.
இதனை அடுத்து விஜய் சொன்னார் அடித்தால் காதில் இருந்து சத்தம் வரும் என்று சொல்வார்களே அதை இப்போது தான் நான் உண்மையாக உணர்கிறேன் என கூறி இருப்பதாக நடிகை சங்கவி பேசிய விசயமானது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம்ம தலைவர் தளபதிய.. அக்கா சங்கவி அடிச்சிருக்காங்க.. என்ற விஷயம் தான் தற்போது இணையம் முழுவதும் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் தளபதியின் பெருந்தன்மையை அவர்களது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
இதனை அடுத்து தளபதி விஜயை அறைந்த உண்மையான காரணம் என்ன என்பதை தற்போது நடிகை சங்கவி தனது நீண்ட கால ரகசியத்தை ரசிகர்களின் மத்தியில் போட்டு உடைத்து விட்டார் என கூறலாம்.