சினிமா நடிகர் நடிகைகளை பொறுத்த வரை, அவர்கள் அடிக்கடி விமர்சனங்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் ஒரு 10 சதவீதம் மட்டுமே உண்மையாக இருக்கும். மீதி 90 சதவீதம் புரளியாகவும், வதந்தியாகவும் தான் இருக்கிறது.
பரபரப்புக்காக அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வகையில், சில நேரங்களில் வதந்திகளை சிலர் கிளப்பி விட்டு விடுகின்றனர்.
குறிப்பாக சில வயதான, மூத்த நடிகர் நடிகர்கள் திடீரென மறைந்துவிட்டனர் என்ற பொய்யான தகவலை பரப்புகின்றனர். சில நேரங்களில் இளம் நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற பொய் தகவல்களை கூறுகின்றனர்.
வதந்திகளை கிளப்பி விடுகின்றனர்
சினிமா ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட நெருக்கமாக புகைப்படங்களை திருமணம் நடப்பது போன்ற காட்சிகளை, புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கு இன்று ரகசிய திருமணம் நடந்து விட்டது என்றும், தகவல்களை பரப்புகின்றனர்.
சினிமா ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, உண்மையில் நடந்தது போல் வெளியிட்டு அவர்கள் பரபரப்பு ஏற்படுத்துவதால், அந்த சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள், சொந்த வாழ்க்கையில் பலத்த சிரமங்களை, வருத்தங்களை, விமர்சனங்களை சந்திக்கின்றனர் என்பதை யாரும் யோசிப்பதே இல்லை.
இது போல் தொடர்ந்து தவறான தகவல்களை, செய்திகளை பரப்புவதால் சில நேரங்களில், இதுபோன்று நடந்த உண்மையான தகவல்களை சொல்லும் போதும் அதை மற்றவர்கள் நம்ப முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக சில நடிகைகள் குழந்தைகளுடன் இருக்கும் பட்சத்தில், அது அவர்களது சொந்த குழந்தை தான் என்றும் கூறி விடுகின்றனர். அதே நேரத்தில் அவரது அக்கா, அண்ணன், தங்கை, தோழி போன்ற ஒருவரது குழந்தையாக கூட இருக்கலாம் என்பதை பலரும் யோசிப்பதே இல்லை.
சங்கீதா
நடிகை சங்கீதா சீரியல்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். இவர் சமீபத்தில் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதல் திருமணம் செய்து கொண்டார்.
கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபி, சில மாதங்களுக்கு முன் அவர்களது திருமணம்தான் இருந்தது. ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா திருமணம் மைசூரில் சாமுண்டி கோவிலில் மிக எளிமையாக நடந்து முடிந்தது.
ரெடின் கிங்ஸ்லி
நெல்சன் இயக்கத்தில், கோலமாவு கோகிலா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து டாக்டர் படத்தில் நடித்தார். அதன் பிறகு ஜெயிலர் படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.
தொடர்ந்து பல படங்களில் ரெடின் கிங்ஸில் காமெடி நடிகராக சிறப்பாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே திருமணமானவர்
நடிகை சங்கீதா ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது பெற்றோர் 2009 ஆம் ஆண்டில் கிரீஸ் என்பவரை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
அதே நேரத்தில் கருத்து வேறுபாடு காலமாக அவர்கள் விவாகரத்து செய்துவிட்டனர் என்றும், இந்நிலையில் நடிகை சங்கீதா ரெடின் கிங்ஸ்லியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்றும் தகவல் பரவியது.
ஆனால் கபடி, கபடி, பிதாமகன், மன்மதன் அம்பு போன்ற படங்களில் நடித்த நடிகை சங்கீதாவின் பெயரும், சீரியல் நடிகை சங்கீதா பெயரும் ஒன்று என்பதால், இப்படி ஒரு குழப்பம் நேர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சங்கீதா, முதல் முறையாக, ரெடின் கிங்ஸ்லியை தான் திருமணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் குழந்தையுடன்…
மைசூரில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா பெண் குழந்தை ஒருவருடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலானது. ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் இது சங்கீதாவின் மகளா என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் உண்மையில் அது அவரது சொந்த மகள் அல்ல என்பது உறுதியாகி இருக்கிறது.
இது சங்கீதாவின் மகளா..? என கேள்வி எழுப்பி வந்த ரசிகர்களுக்கு, நடிகை சங்கீதா, இது என்னுடைய அண்ணன் குழந்தை என்று பதில் கொடுத்து இருக்கிறார்.
பதிலடி
கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை எப்படி என்று கேட்டவர்களுக்கு எனது அண்ணன் குழந்தை சங்கீதா கொடுத்த பதிலடி தந்திருப்பது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.