“உன்ன வச்சி செய்யணும் போல இருக்கு..” மோசமான கமெண்ட்.. கிங்ஸ்லி மனைவி சங்கீதா கொடுத்த பதிலை பாருங்க..!

சினிமா நடிகர் நடிகைகளிடம் பொது இடங்களில் எப்படி பேசுவது என்ற நாகரீகம் ரசிகர்களிடம் வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில், பரஸ்பரம் ஒருவர் மீதான மரியாதை என்பதே சிறிதும் இல்லாமல் போய்விட்டது.

வரம்பு மீறி…

அவர்களிடம் வரம்பு மீறி எக்குத்தப்பாக பேசுவது என்பது அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு சிலர் சரியான பதிலடி தந்து விடுகிறார்கள். சிலர் எதுவும் பேசாமல் மௌனமாக சென்று விடுகிறார்கள். ஆனால், எப்படி இருப்பினும் சில ரசிகர்களின் இது போன்ற தவறான நடவடிக்கையால், அந்த கலைஞர்களின் மனதை காயப்படுத்தவே செய்கிறது.

சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் பொது இடங்களுக்கு வரும்போது ரசிகர்கள் அவர்களிடம் பேச முற்படுகின்றனர். அவர்களை பாராட்டுகின்றனர். சில நேரங்களில் செல்பி எடுக்க விருப்பம் காட்டுகின்றனர்.

சீரியல் நடிகை சங்கீதா

முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை சங்கீதா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: வடிவேலு பாணியில் அதுவரை பனியன் மட்டும் போட்டுக்கிட்டு.. “பாண்டியன் ஸ்டோர்ஸ்” காவ்யா அறிவுமணி..!

ரெடின் கிங்ஸ்லி மனைவி

இவர் சமீபத்தில்தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதல் திருமணம் செய்து கொண்டார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா மெயின் கேரக்டரில் நடித்த கோலமாவு கோகிலா படத்தில், காமெடி நடிகராக ரெடின் கிங்ஸ்லி அறிமுகமானார். தொடர்ந்து டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல காமெடி நடிகராக பிரபலமாகி வருகிறார்.

சமூக வலைதளங்களில்…

சமீப காலமாக சீரியல் நடிகைகள், சினிமா நடிகைகள் என அனைவருமே சமூக வலைதள பக்கங்களில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகின்றனர். தங்களது அழகான, கவர்ச்சியான புகைப்படங்களை தங்களது வலைதள பக்கங்களின் அப்டேட் செய்வது அவர்களது வழக்கமாக இருக்கிறது.

என்னை கைது செய்கிறாய்

அதுபோல் சமீபத்தில் நடிகை சங்கீதா பதிவிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து உன் அழகால் என்னை கைது செய்கிறாய் என்று, ஒரு ரசிகர் கமெண்ட் போட்டு இருக்கிறார். அதற்கு பதிலளித்த நடிகை சங்கீதா, தயவுசெய்து இதுபோல் நிறைய கமெண்ட்களை போடுமாறு அந்த ரசிகரை கேட்டுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: வடிவேலு பாணியில் அதுவரை பனியன் மட்டும் போட்டுக்கிட்டு.. “பாண்டியன் ஸ்டோர்ஸ்” காவ்யா அறிவுமணி..!

வச்சு செய்யணும் போல இருக்கு

இதைப் பார்த்த மற்றொரு ரசிகர், சங்கீதாவை வச்சு செய்யணும் போல இருக்கு, என்று பதிவிட்டார். அதற்கு பதிலளித்த நடிகை சங்கீதா, இந்த ஜென்மத்தில் கஷ்டம். அடுத்த ஜென்மத்தில் கண்டிப்பாக ட்ரை பண்ணலாம், என்று கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.

அவமதிப்பது சரியல்ல..

இது போன்ற அநாகரிகமான வார்த்தைகளால் கமெண்ட் செய்வது, ரசிகர்களுக்கும் அழகல்ல, ஒரு நடிகையை அவமதிப்பது சரியல்ல என்று பலரும் கமெண்ட் செய்த நிலையில், இது தற்போது வைரலாகி வருகிறது

உன்ன வச்சி செய்யணும் போல இருக்கு.. என்ற மோசமான கமெண்ட் அடித்த ரசிகருக்கு, இந்த ஜென்மத்துல அது முடியாது என, கிங்ஸ்லி மனைவி சங்கீதா கொடுத்த அதிரடி பதிலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam