மேஜையில் படுக்க வைத்து.. இதை வச்சி அடிச்சா.. கன்னக்குழி வந்துடும்.. ரகசியம் உடைத்த நடிகை சங்கீதா..!

ரசிகர்களால் பெரிதளவு கவரப்பட்ட நடிகை சங்கீதா ஒரு பிரபலமான விஜே-வாக திகழ்ந்தார். குறிப்பாக தமிழ் திரைப்படம் மற்றும் சின்ன திரைகளில் பணியாற்றி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

ஸ்டார் விஜய் டிவியில் வெளி வந்த பரபரப்பான சீரியலான கனா காணும் காலங்களில் 2022 ஆம் ஆண்டு மலர் டீச்சராக நடித்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை சங்கீதா..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா சீரியலில் ஆன்ட்டி ஹீரோயினி ரோலை சிறப்பாக செய்து வரும் இவர் பராய் என்ற இசை வெளியீட்டு விழாவிலும் இடம் பிடித்து இருக்கிறார்.

ஐடி ஊழியராக ஆரம்பத்தில் பணியை ஆரம்பித்த இவர் அழகு சீரியலில் நடித்து அசத்தியவர். சின்னத்திரை வாய்ப்பினை அடுத்து பெரிய திரை வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

விஜே-வாக பணிபுரிந்த போது ஜெயம் ரவி, தலைவாசல் விஜய், ஈஸ்வர், நிவேதிதா பெத்துராஜ் போன்ற பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கும் இவர் 24 பிரேம், பிராங்க்கா சொல்லட்டா மற்றும் லேடிஸ் சாய்ஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

கண்ணக்குழி ரகசியம்..

கண்ணுக்குழி அழகி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படக்கூடிய நடிகை சங்கீதா தற்போது தனது கண்ணக்குழி ரகசியம் பற்றி பேசிய விஷயம் பலர் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

பொதுவாகவே சுரட்டை சோறு போடும் கன்னத்தில் குழி இருந்தால் செல்வம் அதிகமாகும் என்ற பழமொழிகளை நீங்கள் கேட்டிருக்கலாம். அந்த வகையில் கன்னத்தில் குழியோடு இருக்கக்கூடிய பெண்கள் சிரிக்கும் போது அவர்களது சிரிப்பை அழகாக பலரும் வருணித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சங்கீதா அழகு சம்பந்தமான பல விஷயங்களை பகிர்ந்த சமயத்தில் கன்னத்தில் குழி இல்லாதவர்கள் அந்த கண்ணக்குழி அழகைப் பெற்றிட என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பல டிப்ஸ்களை விரிவாகச் சொன்னார்.

கன்னக்குழி குழி அழகினை பெற வேண்டும் என்பவர்களை கட்டாயம் மேசையில் படுக்க வைத்து ஒரு சுத்தியலை கொண்டு அடித்தால் கட்டாயம் கண்ணக்குழி கிடைத்துவிடும் என்று நக்கலாக பதில் அளித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள். மேலும் கன்னக்குழி அழகுக்கு நான் எப்படி டிப்ஸ் கொடுப்பேன் என்று சிரித்த வண்ணம் கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் பேட்டி கண்ட பெண் இன்று இது போன்ற கன்னக் குழியை செயற்கையாக உருவாக்க பலரும் முயற்சி செய்வதாக கூறியிருக்கிறார். இதற்கு முகத்தை நன்கு கழுவி விட்டு கன்னப்பகுதியில் விரல்களை உள்நோக்கி அழுத்திய படி வைத்தால் செயற்கையாக கன்னக்குழி உருவாகும் என்று கூறி வருவதாக கூறினார்.

இதனை அடுத்து இப்படித்தான் கன்னக்குழி அழகை பெற சுத்தி வைத்து அடித்தால் கிடைக்குமா? இது தான் உங்கள் கன்னக்குழி ரகசியமா? என்று பல்வேறு வகைகளில் நக்கலாக கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.

முக அழகு என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான அம்சமாக திகழும். மேலும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். அந்த வகையில் முக அழகை மேலும் மெருகேத்தி காட்டக்கூடிய வகையில் இந்த கன்னக்குழி அழகு இருக்கும் என கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version